அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி, ஜூன் 26ஆம் தேதியும், அடுத்து 28ஆம் தேதியும் போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டிகள், இந்திய நேரப்படி, பிற்பகல் 3:30 மணிக்கு துவங்கும்.இந்நிலையில், இரு அணிகளின் நேருக்கு நேர் வரலாறு என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.இந்தியா, அயர்லாந்து ஆகிய அணிகள் 2009ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் மோதி வருகின்றன. 2009ஆம் ஆண்டில், நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில்தான், இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. இதில், இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.இரு அணிகளும், இதுவரை மொத்தம் 8 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 8 போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது. 2009 முதல் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதினாலும், 2018ஆம் ஆண்டில்தான் இருதரப்பு தொடர்களில் விளையாட ஆரம்பித்தன.2018, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி, இந்த 6 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியைப் பெற்றது. 2009-லும், 2024ஆம் ஆண்டிலும் டி20 உலகக் கோப்பையில் நேருக்கு மோதிய நிலையில், இரண்டிலும் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.அதிர்ண்ணி கொடுக்கும் அயர்லாந்து அணி: சமீப காலமாகவே, இருதரப்பு தொடர்களில், இந்திய அணிக்கு எதிராக அயர்லாந்து அணி அபாரமாக விளையாடி வருகிறது. 2018ஆம் ஆண்டில் 76 ரன்கள் வித்தியாசத்திலும், 143 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது.இதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டில், முதல் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில், 4 ரன்கள் வித்தியாசத்தில்தான், அயர்லாந்து அணி தோற்றது. இப்போட்டியில், 226 ரன்கள் இலக்கை துரத்திய அயர்லாந்து அணி, 4 ரன்களில் தோற்றது.அடுத்து, 2023ஆம் ஆண்டில், முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில்தான் வென்றது. அடுத்து, இரண்டாவது போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.இப்படி, கடந்த இரண்டு முறை நடைபெற்ற இரு தரப்பு தொடர்களிலும் இந்திய அணி, போராடிதான் வெற்றியைப் பெற்றது. இதனால், தற்போது இந்தியா, அயர்லாந்து இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சூர்யவன்ஷி மீதும் எதிர்பார்ப்பு: மேலும், சமீப காலமாகவே அதிரடியாக விளையாடு வரும் வைபவ் சூர்யவன்ஷி, 15 வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகம் ஆகி விளையாட உள்ளார். இதனால், அயர்லாந்து தொடரில், சூர்யவன்ஷி மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சூர்யவன்ஷி மட்டும் விளையாடினால், இந்திய அணிக்காக மிகவும் இளம் வயதில் விளையாடிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார். இதற்குமுன், சச்சின் டெண்டுல்கர் 16 வயதிம் அறிமுகம் ஆனதுதான் சாதனையாக இருந்தது.இத்தொடரில், சூர்யவன்ஷி அதிரடி காட்டினால், அடுத்து ரெகுலராக ஓபனராக விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதனால், சஞ்சு சாம்சன் ஒன்டவுன் இடத்திற்கு செல்லும் நிலைமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

