52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
நீலகிரியில் 28 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை ஏன்?

மலை மாவட்டமான நீலகிரியில் பழங்குடியின மக்கள், தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கல்வி பெற வசதியாக கிராமப்புறங்களில் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. வனத்தை ஒட்டியும், போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளிலும் கூட அரசு தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில், இங்குள்ள 28 இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு பெரிய சரிவுக்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்ப்போம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை

  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் - 352
  • நடுநிலைப்பள்ளிகள் - 93
  • உயர்நிலைப் பள்ளிகள் - 49
  • அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் - 8
  • பகுதி அரசு உதவிப் பெறும் உயர்நிலைப் பள்ளிகள் - 5
  • ஆதி திராவிடர் பள்ளிகள் - 3
  • சமூக நலப்பள்ளி - 1
  • அரசு மேல்நிலைப்பள்ளிகள் - 32
  • அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் - 10
  • பகுதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி - 1

என மொத்தம் 554 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சரிந்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கை

வகுப்புகள் 2025-26 கல்வியாண்டு 2026-27 நடப்பு கல்வியாண்டு வித்தியாசம்
1 ஆம் வகுப்பு 2,183 பேர் 1,689 பேர் 494 பேர்
6 ஆம் வகுப்பு 3,009 பேர் 2,749 பேர் 2,749 பேர்
11 ஆம் வகுப்பு 3,476 பேர் 2,924 பேர் 552 பேர்
மொத்தம் 35,446 பேர் 32,437 பேர் 3,009 பேர்

இதன் மூலமாக கடந்த கல்வியாண்டில் எண்ணிக்கையை விட நடப்பு கல்வியாண்டில் படித்து வரும் மாணவ, மாணவர்களின் மிகவும் குறைந்துள்ளது.

28 பள்ளிகளில் 1ம் வகுப்பில் ஒரு மாணவர் கூட இல்லை

நீலகிரி மாவட்டம் முழுவதும் இதுவரை 20 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், இது கடந்த 10 ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றமே தவிர 20 பள்ளிகளும் இந்த ஆண்டே மூடப்படவில்லை. இந்த ஆண்டு புதிதாக 4 பள்ளிகள் மட்டுமே மூடப்பட்டது.மாணவர்களுக்கு கல்வி அளிக்க தமிழ்நாடு அரசு பல திட்டங்களை தீட்டி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இது ஒருபுறம் இருக்க, நடப்பாண்டில் இங்குள்ள 28 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை என்பதே மற்றொரு அதிர்ச்சிகரமான விஷயமாக இருக்கிறது.

இதற்கு என்ன காரணம்?

நீலகிரியில் பிறப்பு விகிதம் குறைவு, மாவட்டத்தை விட்டு மற்ற இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்வது போன்றவை இந்த மாணவர்கள் சேர்க்கை சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் இன்னும் மாணவர் சேர்க்கை முடியவில்லை. வருகின்ற ஜூலை 31 வரை கால அவகாசம் இருப்பதால், அதற்குப் பிறகே இறுதியான எண்ணிக்கை தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *