52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
தற்கொலை செய்து 9 நாட்கள் கழித்து சொந்த ஊரில் நடந்த இளம் டிவி நடிகையின் இறுதிச் சடங்கு

சஞ்சிதா மரணம்: பார்க்கும் பழக்கம் உள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் கும்கும் பாக்யா சீரியல் நன்றாக தெரியும். அந்த சீரியலில் தியா டாண்டன் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் 26 வயதான சஞ்சிதா உகலே. தொடர்ந்து சீரியல்களில் மட்டும் அல்ல இந்தி படங்களிலும் நடித்து வந்தார். மும்பையில் தான் குடும்பத்துடன் தங்கியிருந்த வீட்டின் படுக்கையறையில் வின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சஞ்சிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தார்கள் போலீசார். இறுதிச்சடங்கு: இந்நிலையில் சஞ்சிதாவின் இறுதிச் சடங்கு ஜூன் 23ம் தேதி நடந்திருக்கிறது. அஹில்யாநகர் மாவட்டத்தில் இருக்கும் டோங்கர்காவ்ன் கிராமத்தில் தான் சஞ்சிதாவின் இறுதிச் சடங்கு நடந்தது என் தகவல் வெளியாகியிருக்கிறது. சஞ்சிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.அதில் அவர் முகத்தில் துளி கூட கவலை இல்லை, சந்தோஷம் மட்டுமே இருந்தது. அந்த அளவுக்கு சந்தோஷமான ஒரு ஆள் ஏன் தற்கொலை செய்யும் துயர முடிவை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.அதே ரீல்ஸை இன்ஸ்டா ஸ்டோரியாகவும் போட்டிருந்தார் சஞ்சிதா. அவர் இறந்த செய்தி வெளியான பிறகும் ஸ்டோரி ஆக்டிவாக இருக்கவே அதை பார்த்துப் பார்த்து மக்கள் வேதனைப்பட்டார்கள். தங்களின் மகள் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அவருடன் யாராவது இருந்து கொண்டே இருந்ததாகவும் தந்தை மச்சிந்திரா உகலே தெரிவித்தார்.தந்தை தகவல்: அவர் உயிரை விடும் அளவுக்கு மன உளைச்சலில் இருந்தது எங்களுக்கே தெரியாது. சஞ்சிதாவை தனியே விட்டுச் சென்றது எங்கள் தவறு தான் என அப்பா மச்சிந்திரா வேதனை தெரிவித்தார்.பணம் தொடர்பாக தங்களின் மகளுக்கு டார்ச்சர் கொடுக்கப்பட்டதாக தெரிவித்த மச்சிந்திரா, யார் அந்த நபர்கள் என்பதை சொல்லவில்லை. மேலும் மகளுக்கு நீதி கேட்டிருக்கிறார். அண்ணன் ஆகாஷ்: சஞ்சிதா இறந்தது ஜூன் 14ம் தேதி. பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடிய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் ஜூன் 14ம் தேதி தான் தன் மும்பை வீட்டில் குர்தாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை சுட்டிக்காட்டி பிரஷர் தான் என் தங்கை இறப்புக்கு காரணம் என்றார் சஞ்சிதாவின் சகோதரரான ஆகாஷ் சதீஷ். அதிகாரம் படைத்தவர்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் செய்வதாக குற்றம் சாட்டினார். காஸ்டிங் அதாவது நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் ஆட்கள் சஞ்சிதாவை மோசமாக நடத்தியதாக புகார் எழுந்தது. காஸ்டிங் என்றால் வாய்ப்புக்காக சஞ்சிதாவை படுக்கைக்கு எதுவும் அழைத்தார்களா, படுக்கைக்கு செல்வதற்கு பதில் இந்த உலகை விட்டுச் சென்றுவிடலாம் என தற்கொலை செய்து கொண்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.மற்றவர்களை மகிழ்விக்கும் நடிப்புத் துறையை சேர்ந்தவர்கள் மன அழுத்தத்தில் இருப்பது அதிகரித்து வருவது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *