52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
அலைப்பேசியை அணைத்து வைத்து தலைமறைவு: அமைச்சர் ராஜ்மோகன் பேச்சுக்கு திமுகவில் இருந்து வந்த பதிலடி

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் நேற்றைய தினம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். காலையில் துவங்கிய இந்த ரெய்டு இரவு வரைக்கும் நீடித்தது. இதற்கிடையில் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ஆளுங்கட்சியின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என திமுகவை சார்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எ.வ. வேலு வீட்டில் ரெய்டு நடந்தது தொடர்பாக தவெக அமைச்சர் இன்று செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். இதனையடுத்து அவருடைய பேச்சுக்கு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதிலடி கொடுத்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.அதாவது, சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ஜோசப் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பினேன். இதன் காரணமாகவே தனக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடக்கிறது என கருத்து எ.வ. வேலு தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த கருத்து தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தவெக , நல்ல ஆதாரத்துடன் அவர் சிக்கி இருக்கிறார். தவறு இல்லையென்றால் துணிச்சலோடு எதிர்கொள்ளட்டும் என தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் அவருடைய இந்த பேச்சுக்கு திமுகவை சார்ந்த முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், ஆதாரம் எதுவும் இல்லை. விரைவில் உங்களுடைய அவதாரம் தோலுரியும் என பதிவிட்டுள்ளார். அதாவது ஆதாரம் இருப்பதாக ராஜ்மோகன் தெரிவித்த நிலையில், அதெல்லாம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் பரந்தாமன்.மேலும் அவருடைய பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது, தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று யார் சொல்லுகிறார் தெரியுமா? கரூரில் 41 அப்பாவி பொது மக்கள் பலியாவதற்கு காரணமான உங்கள் தலைவர் தவெக விஜய் பின்னங்கால் பிடற ஓடி ஒளிந்தவர். அவருடைய வரிசையில் உங்கள் அலைபேசியை கூட அணைத்து வைத்து தலைரைவான ராஜ்மோகன் பேசலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு காவல்துறை சோதனையை எதிர்கொள்ளும் முன்னாள் அமைச்சர் அண்ணன் எ.வ. வேலு அன்று இரவே செய்தியாளர்களை சந்தித்தார். அவர் துணிச்சலும் ரெய்டு குறித்து விளக்கினார். கரூர் சம்பவத்துக்கு பின்பாக உங்களில் யாராவது பத்திரிக்கையாளர்களை சந்தித்தது உண்டா? உங்கள் தலைவர் விஜய் இன்று வரை ஸ்கிரிப்ட் வைத்தே பேசுகிறார். அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க ஏன் தொடை நடுங்குகிறது எனவும் கடுமையான கேள்விகளை தன்னுடைய பதவில் முன்வைத்துள்ளார் பரந்தாமன். தொடர்ந்து அவருடைய பதிவில் 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுகவைப் பார்த்து ஓடி ஒளிந்த நேற்று பெய்த மழையில் முளைத்த தமிழக வெற்றி கழகம் தைரியம் பற்றி கேட்பது நகைச்சுவையாக உள்ளது. உங்களுக்கு மிசா தெரியுமா. பொடா தெரியுமா. சிறைவாசம் கண்டதுண்டா என அடுக்கடுக்கான கேள்விகளை தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார்.அதோடு சினிமாவில் நடித்தவர் தலைவர் மேடைகளில் தொகுத்தவர் அமைச்சர் என instant அமைச்சரவை எத்தனை நாளைக்கு தாங்கும் என்று பார்ப்போம்? எனவும் தனது பதிவில் ராஜ்மோகன் பேச்சுக்கு கடுமையான பதிலடிகளை பதிவு செய்துள்ளார் பரந்தாமன். அவருடைய இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *