52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
CSK, RCB Trading – டிம் டேவிட்டை தாறோம்: பதிலுக்கு இந்த வீரர கொடுங்க: சிஎஸ்கேவிடம் கேட்ட ஆர்சிபி

முன்பு எப்போதும் இல்லாத வகையில், ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங் பெரிய அளவில் நடக்க வாய்ப்புள்ளது. 10 அணிகளில், பெரும்பாலான அணிகள், முக்கிய வீரர்களை டிரேடிங்கில் கொண்டுவர முடிவு செய்திருப்பதால், ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், வரலாற்றில் இடம்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.சிஎஸ்கே, பினிஷர் இடம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த மூன்று சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் இருக்கிறது. இதற்கு முகய காரணம், சிஎஸ்கேவால் 170 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால், ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில், சிறந்த பினிஷரை வாங்க முடிவு செய்துள்ளனர்.இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து அசுதோஷ் சர்மாவை வாங்க, சிஎஸ்கே நிர்வாகம் பேச்சு வார்த்தையை நடத்தியது. அப்போது, மாற்றாக டிவோல்ட் பிரேவிஸை கேட்டனர். பிரேவிஸும், ஸ்டப்ஸும் ஒரே அணியில் இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதிதான், அசுதோஷ் சர்மாவை விட்டுக்கொடுத்து, பிரேவிஸை வாங்க முடிவு செய்தனர்.சீனுக்குள் வரும் ஆர்சிபி: இந்நிலையில், ஆர்சிபி அணியும் டிவோல்ட் பிரேவிஸை கேட்டு நிற்கிறது. பிரேவிஸை விட்டுக்கொடுத்தால், மாற்றாக டிம் டேவிட்டை விட்டுக்கொடுக்க தயார் என ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில், டெத் ஓவர்களின்போது வேகப்பந்து வீச்சாளர்களை அபாரமாக எதிர்கொள்ள முடியும். இதனால், டிம் டேவிட் வந்தால், அது சிஎஸ்கேவுக்கு நல்ல விஷயமாகதான் இருக்கும்.பேச்சு வார்த்தை நிறுத்தம்: இந்நிலையில், டிவோல்ட் பிரேவிஸை கேட்டு டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள், பதிலுக்கு நல்ல ஆஃபர்களை கொடுத்துள்ள நிலையில், பிரேவிஸை விடுவிக்க கூடாது என சில சிஎஸ்கே நிர்வாகிகள் தெரிவித்திருப்பதால், தற்போதைக்கு இந்த பேச்சு வார்த்தையை பாதியில் கைவிட முடிவு செய்துள்ளனர்.ஹர்திக் பாண்டியா வாங்க பேச்சு வார்த்தை: மேலும், ஹர்திக் பாண்டியாவை வாங்கும் பேச்சு வார்த்தையையும் சிஎஸ்கே தற்போது தள்ளிப் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஆயுஷ் மாத்ரே வேண்டும் என திட்டவட்டமாக இருக்கும் நிலையில், எக்காரணம் கொண்டும் ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க கூடாது என்ற முடிவில் சிஎஸ்கே நிர்வாகம் இருக்கிறதாம்.காரணம், ஆயுஷ் மாத்ரே, கேப்டன் மெட்டிரியல் என்பதால், மாத்ரேவின் சேவை, எதிர்காலத்தில் நிச்சயம் தேவை என சிஎஸ்கே நிர்வாகம் இருக்கிறதாம். ஆகையால், இப்போது இருந்தே ஆயுஷ் மாத்ரேவுக்கு, கேப்டனுக்கா பயிற்சியை கொடுத்து வளர்த்துவிட சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதனால், தற்போது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ராஜஸ்தான் ராயல்ஸ் கையை எதிர்பார்த்து நிற்கிறது. யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை விட்டுக்கொடுத்தால், மாற்றாக ஹர்திக் பாண்டியாவை தருகிறோம் என ராஜஸ்தான் ராயல்ஸுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துவிட்டனர்.ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் சரியான கேப்டன் தேவைப்படுவதால், ஹர்திக் பாண்டியாவை டிரேடிங்கில் வாங்கி கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ஓபனராக ஒரு இந்திய ஸ்டார் வீரர் தேவைப்படுவதால்தான், இந்திய இளம், டாப் ஆர்டர் பேட்டரை டார்கெட் செய்து கேட்டு வந்தனர். தற்போது, யாஷஸ்வி ஜெய்ஷ்வால், மும்பை இந்தியன்ஸுக்கு செல்வது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *