52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
IND A vs SL A Test – மாஸ் காட்டிய ‘குட்டி ஹர்திக் பாண்டியா’: அதிரடி கம்பேக் கொடுத்த இந்திய ஏ அணி

இலங்கை சென்றுள்ள இந்திய ஏ அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்திய ஏ அணி இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய இந்திய ஏ அணியில், ஓபனர் சாய் சுதர்ஷன் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி, 175 பந்துகளில் 132 ரன்களை குவித்து அசத்தினார். மற்ற டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஆயுஷ் பாண்டே 25 (64), தேவ்தத் படிக்கல் 12 (7), ருதுராஜ் கெய்க்வாட் 22 (53) ஆகியோர் அடுத்தடுத்து சொதப்பினார்கள்.இதனைத் தொடர்ந்து, கேப்டன் துரூவ் ஜோரல், அபாரமாக செயல்பட்டு, 215 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 141 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், கடைசி நேரத்தில், ஷேக் ரஷித் 63 (113), ஹர்ஷ் துபே 30 (51) ஆகியோரும் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். இறுதியில், இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 452/6 ரன்களை குவித்து, டிக்ளேரை அறிவித்தது.இலங்கை ஏ அணி இன்னிங்ஸ்: அடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய இலங்கே ஏ அணியில், ஓபனர்கள் 11, 10 ஆகிய ரன்களை அடித்து அவுட் ஆனப் பிறகு, மிடில் வரிசை பேட்டர்கள் அபாரமாக செயல்பட்டனர். ஒன்டவுன் பேட்டர் நுவனிது பெர்ணான்டோ 142 பந்துகளில் 84 ரன்களையும், பந்தாரா 162 பந்துகளில் 70 ரன்களையும், கேப்டன் ஷகான் அரச்சிகே 129 பந்தில் 72 ரன்களையும் குவித்து அசத்தினார்கள்.இப்படி, மூன்று பேட்டர்கள் அடுத்தடுத்து அபாரமாக செயல்பட்ட நிலையில், அதன்பிறகு வந்த பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால், இலங்கை ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 330/10 ரன்களை மட்டும் எடுத்து, 122 ரன்கள் பின்தங்கியது.ஆல்ரவுண்டர் அபார பந்துவீச்சு: இப்போட்டியில், இந்திய ஏ அணியில், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருக்கும் ஆகிப் நபி தார், 19.4 ஓவர்களில் 58 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இவரால் பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட முடியும். இதனால், இனி டெஸ்டில், இவருக்குதான் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல வேகத்தில் பந்துவீசுகிறார், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால், பிசிசிஐ இவருக்கு விரைந்து டெஸ்டில் வாய்ப்பு கொடுக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.இதற்போது, இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வரும் இந்திய அணியில், ஓபனர் சாய் சுதர்ஷம் 16 பந்தில் 7 ரன்களை எடுத்திருந்தபோது, தசை பிடிப்பு பிரச்சனை காரணமாக அவதிப்பட்டார். இதனால், ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.தற்போது, ஆயுஷ் பாண்டே 20 (52), தேவ்தத் படிக்கல் 20 (35) ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்திய ஏ அணி, 48/0 ரன்களை எடுத்து, 170 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், 3ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை, கடைசி நாள் ஆட்டத்தில், இந்திய அணி 250+ ரன்களை அடித்து, இலங்கை ஏ அணியின் 10 விக்கெட்களையும் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *