52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
தென்மேற்கு பருவமழை பத்தல, வெப்பம் குறையல: எகிறிய தமிழக பவர் டிமாண்ட்- கைகொடுக்கும் சோலார்

ஏப்ரல் 29, 2026ஐ காட்டிலும் தமிழகத்தில் மின் தேவை புதிய உச்ச தொட்டது. அதாவது, 21, 307 மெகாவாட் என்று பதிவானது. அதைவிட நடப்பு ஜூன் மாதத்தில் அதிக தேவை ஏற்பட்டு விடுமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைக்காலம் முடிந்துவிட்டது என்று கருதுவோரை ஏமாற்றும் வகையில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை.

லேட்டாகும் தென்மேற்கு பருவமழை

ஜூன் மாதம் பிறந்துவிட்டாலே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். இதன் காரணமாக குளிர் காற்றின் தாக்கம் ஏற்பட்டு, மின் தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜுன் 26, 2026 அன்று 20,976 மெகாவாட் என மின்சாரத் தேவை பதிவாகியுள்ளது. மின் நுகர்வு 456.28 மில்லியன் யூனிட்கள் என்பது கவனிக்கத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடுகையில் இம்முறை தான் ஜூன் 26ல் மின் தேவையும், மின் நுகர்வும் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு முழு வீச்சில் தொடங்காததும் ஒரு காரணம்.

ஜூன் மாதம் அதிகரித்த மின் தேவை

ஜுன் 26, 2026 ஜூன் 26, 2025 ஜூன் 26, 2024
மின் தேவை 20,976 மெகாவாட் 18,378 மெகாவாட் 16,989 மெகாவாட்
மின் நுகர்வு 456.28 மில்லியன் யூனிட் 397.37 மில்லியன் யூனிட் 361.6 மில்லியன் யூனிட்

கடும் நெருக்கடியில் மின்சாரத் துறை

இதனால் பல இடங்களில் மின்தடை பிரச்சினைகளை பார்க்க முடிந்தது. ஏற்கனவே மின்சார உபகரணங்கள் பழுது, புதுப்பிக்க தவறியது, ஆட்கள் பற்றாக்குறை, கடுமையான நிதிச்சுமை போன்ற காரணங்களால் மின்சார வாரியமும், தமிழக மக்களும் தவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் இன்னும் குறையாத வெப்பம் நெருக்கடியை அதிகரித்து வருகிறது. அடுத்ததாக தலைநகர் யின் நிலவரத்திற்கு வருவோம். வழக்கமாக ஜூன் மாதம் வந்துவிட்டாலே மின்சார தேவை என்பது புதுப்புது உச்சங்களை தொடும். ஏனெனில் மாநிலத்தின் மற்ற இடங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து மின் தேவையை குறையும். அதேபோலத் தான் இம்முறை காணப்படுகிறது.

நண்பகலில் கைகொடுக்கும் சூரிய மின்சக்தி

நடப்பாண்டு சென்னையின் மின்சார தேவை என்பது 4,800 மெகாவாட் ஆகும். இதுபற்றி தமிழ்நாடு மின்சார விநியோக கழகத்தின் அதிகாரிகளிடம் கேட்கையில், தற்போது ஏற்பட்டுள்ள அதிகப்படியான மின் தேவையை பூர்த்தி செய்வதற்கான போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகப்படியான என்பது நண்பகல் நேரத்தில் தான் ஏற்படுகிறது. அப்போது சூரிய மின்சக்தி (Solar Power) மூலம் நிலைமையை சமாளிக்க முடிகிறது.அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக மின் உற்பத்தியும் படிப்படியாக அதிகரித்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் 26 வெள்ளி அன்று அதிகப்படியான மின் தேவை இருந்தது. அன்றைய தினம் சூரிய மின் உற்பத்தி 7,526 மெகாவாட். இதேபோல் காற்றாலை மூலமும் மின்சாரம் கிடைத்தது என்றனர்.

அதிகரிக்கும் மின் தேவை - தமிழக அரசு என்ன செய்யலாம்?

தமிழகத்தில் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கு சூரிய மின் சக்தி, காற்றாலை மின்சாரம் ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் உற்பத்தியை அதிகப்படுத்துவது பெரிதும் கைகொடுக்கும். இதுதவிர குறுகிய கால மற்றும் நீண்ட கால மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களில் தமிழக அரசின் மின்சார விநியோக கழகம் கையெழுத்திட்டுள்ளது. இவற்றின் மூலம் மாநிலத்திற்கு போதுமான மின்சாரத்தை பெற முடியும். அதேசமயம் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட மின் உபகரணங்கள் பழுது அடிக்கடி ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய போதுமான எண்ணிக்கையில் ஊழியர்களை நியமித்து பணிகளை முடுக்கி விட வேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *