52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
என் திருமண தாலி முதல் தந்தையின் மரணம் வரை- முதல்வர் விஜய்க்கு நன்றி கூறி சாந்தனு வெளியிட்ட உருக்கமான பதிவு!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும் திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜின் மறைவுக்கு முழு அரசு மரியாதை அளித்து, துக்க வீட்டிற்கு நேரில் வந்து ஆறுதல் கூறிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அவரது மகன் சாந்தனு பாக்யராஜ் நெஞ்சார நன்றி தெரிவித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் நெகிழ வைத்துள்ளது.திரைத்துறைக்கு கே. பாக்யராஜ் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நேரடி உத்தரவின் பேரில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன. இந்த நிலையில், தனது குடும்ப துயரத்தின் போது முதலமைச்சர் விஜய் காட்டிய மனிதநேய பண்புகளை விவரித்து சாந்தனு உணர்ச்சிப்பூர்வமாக தனது சமூக வலைதளத்தில் பதிவு

என் திருமண தாலி முதல் தந்தையின் மரணம் வரை - சாந்தனு

சாந்தனு மற்றும் அவரது குடும்பத்தினருடன் நடிகர் விஜய் பல வருடங்களாக நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார். சாந்தனுவின் திருமண விழாவின் போது நேரில் கலந்து கொண்டு, தாலி எடுத்துக் கொடுத்துத் திருமணத்தைத் துவக்கி வைத்ததே விஜய் தான். இதனைத் தனது பதிவில் முதன்மையாகக் குறிப்பிட்டுள்ள சாந்தனு, தந்தையின் துக்க தினத்தில் நடந்த நெகிழ்ச்சியான தருணத்தை உடைத்துள்ளார்.அவரது பதிவில், " உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது. என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை. அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன். அரசு மரியாதை! மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி Anna என பதிவிட்டு உள்ளார்.

இணையத்தில் வைரலாகும் முதலமைச்சரின் எளிமை

தமிழகத்தின் முதலமைச்சராக மிக உயர்ந்த ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், துக்க வீட்டிற்கு வந்த போது தனது அதிகாரப் பந்தாக்கள் மற்றும் பதவி அந்தஸ்து எதையும் காட்டாமல், தரையில் மண்டியிட்டு சாந்தனுவின் தாயார் பூர்ணிமா பாக்யராஜிற்கு விஜய் ஆறுதல் கூறிய விதம் அரசியல் மற்றும் திரைத்துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.சாந்தனுவின் இந்த உருக்கமான பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, லட்சக்கணக்கான ரசிகர்களின் லைக்குகளையும் நெகிழ்ச்சியான கமெண்டுகளையும் குவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *