52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
காங்கிரஸ் அடியை தாங்க மாட்டோமா: அண்ணா நாக் அவுட் தெரியுமா? மாணிக்கம் தாகூருக்கு திமுக பதிலடி

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக திமுக கூட்டணியில் இருந்து விலகியதை தொடர்ந்து காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை திமுக முன்வைத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் இடையில் கடுமையான வார்தை போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் காங்கிரஸ் மாநில தலைவராக பொறுப்பேற்றதை தொடர்ந்து திமுக மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.அதோடு காங்கிரஸை விமர்சித்தால் திருப்பி அடிப்போம் எனவும் பேசி இருந்தார் மாணிக்கம் தாகூர். அவருடைய இந்த கருத்தினை தொடர்ந்து திமுக தரப்பில் இருந்தும் பதிலடிகள் கிளம்ப ஆரம்பித்தன. இந்நிலையில் திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் எழிலரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து காங்கிரஸ் குறித்தும் அவர் விமர்சனம் செய்தது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.அவர் கூறுகையில் காங்கிரஸை பற்றி ஏதாவது பேசினால் நாங்க அடிக்கிற அடி தாங்க மாட்டோம் சொல்றார். அண்ணா 1967-ல் அடிச்சாரு. ஒரு நாக் அவுட். இன்னும் எந்திரிக்கவில்லை. நாங்கள் தான் ஐசியூவில் வைச்சு காப்பாற்றி, ஜெனரல் வார்டுல வைச்சு இருந்தோம். அங்க இருந்து யாரோ பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க. அங்கயும் போய் சேர்ந்துகிட்டாங்க. இவங்கெல்லாம் எங்களை அடிச்சால் தாங்க மாட்டோம் சொல்றாங்க.அண்ணா அடிச்சு 50 வருசத்துக்கு மேல ஆகிருச்சு. அடி வாங்குனது. நாக் அவுட் ஆனது ஐசியூவில் இருந்து எழுந்து வந்துள்ளது. நாங்கதான் காப்பாத்தி கொண்டு வந்து இருக்கோம். இதற்கே இந்த பேச்சு என மாணிக்கம் தாகூரின் பேச்சுக்கு எழிலரசன் பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா ஊரை விட்டு போங்கன்னு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சனம் செய்தது குறித்து பேசியவர் மக்களின் மனங்களில் இருப்பவர் எங்களுடைய தலைவர்.அவர் கொண்டு வந்த திட்டம் இருக்கின்ற வரைக்கும் மு.க. ஸ்டாலின் தான் இந்த நாட்டை ஆள்வதாக பொருள் என தெரிவித்துள்ளார் எழிலரசன். அவரின் இந்த பேட்டி தற்போது கவனம் ஈர்த்து வரும் நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் கைது குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தவெக எம்எல்ஏ மீது அதே கட்சியை சார்ந்த பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அம்பாசமுத்திரம், கரூர், மதுராந்தகம் உள்ளிட்ட தொகுதிகளின் இடைத்தேர்தலை மனதில் இந்த கைது நடக்கிறது. அனிதா ராதாகிருஷ்ணன் வெளியில் இருந்தால் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலுக்கு வேலை பார்ப்பார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு கரூர் இடைத்தேர்தலை மனதில் வைத்தும் குறி வைக்கப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் ஒன்றினை பகிர்ந்துள்ளார் எழிலரசன். அதோடு அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டையும் எழிலரசன் முன்வைத்துள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் காங்கிரஸ் குறித்து எழிலரசன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரியளவில் கவனம் ஈர்த்து வருகின்றன. காங்கிரஸை விமர்சித்தால் சும்மா இருக்க மாட்டோம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து என்ன பதிலடி வர போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *