52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
பெங்களூரு Day Care-ல் குழந்தைகள் சித்ரவதை.. கர்நாடக அரசுக்கு நோட்டீஸ்- தேசிய மனித உரிமைகள் ஆணையம்

கர்நாடகா மாநிலம், பெங்களூரை அடுத்த குண்டலஹள்ளி கேட் என்ற பகுதியில் கேப்ஜெமினி டெக்னாலஜிக்கல் இந்தியா என்ற ஐ.டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மேலும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பெண்களின் குழந்தைகளை பகல் நேரத்தில் கவனித்து கொள்ள ஐ.டி நிறுவனத்தின் சார்பில் `சொசைட்டி ஜெனரல் பேபி கேர்'செயல்பட்டு வருகிறது.

பெங்களூரு குழந்தைகள் பராமரிப்பு மையம்

அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், வேலை நேரத்தில் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக அருகிலேயே வைத்திருக்கவும், தேவையான நேரத்தில் சென்று பார்த்துக் கொள்ளவும் குழந்தைகள் பராமரிப்பு மையம் வசதியாக இருந்தது.இதனால் நிறுவனத்திற்கு வரும் பெண்கள் தங்களுடைய குழந்தைகளை பணியின் போது விட்டு செல்வதை வழக்காம வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில், குழந்தைகளை சித்ரவதை செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாஷிங்மெஷின் உள்ளே வைத்து மிரட்டிய சம்பவம்

குறிப்பாக அந்த வீடியோவில் குழந்தைகள் அழாமல் இருக்க வாஷிங்மெஷின் உள்ளே வைத்து குழந் தைகளின் வாயில் தண்ணீரை அடிப்பது.குழந்தைகளை கழிவறையின் உள்ளே வைத்து பூட்டுவது,கழிப்பறையில் கட்டாயமாக அமர வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தனர். மேலும் அந்த வீடியோவில்பயத்தில் அழும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தனர். இந் த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டங்களும் எழுந்தனர்.இதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எச்.ஏ.எல் போலீசார் விசாரணை வழக்கு பதிவு செய்தனர்.மேலும் குழந்தைகள் பாதுக்காப்பு நீதிச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.ஜூலை 2-ஆம் தேதி இந்த வீடியோ எடுப்பட்டது தெரியவந்தது.

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ இதோ

`சொசைட்டி ஜெனரல் பேபி கேர் வேலை செய்து வந்த விஜயலட்சுமி உட்பட இருவரைக் கைது செய்துள்ளனர்.புகாருக்கு ஆதரவாக மூன்று பெற்றோரிடமிருந்து காவல்துறை தகவல்களையும் ஆதாரங்களை பெற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த குழந்தைகள் பராமரிப்பு மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

இந்த நிலையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. இது குறித்து கர்நாடகா மாநில முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் , சில பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பாளர்களால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அரசு தரப்பில் குழந்தைகள் பாதுக்காப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு சில டேகேர் செண்டரின் செயல்பாடுகளால், நேர்மையாக இருக்கும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் நற்பெயர் கேள்விகுறியாகி உள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் ஈடுப்படமால் இருக்க விதிமுறைகளும் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டுமென்று குழந்தைகள் பராமரிப்பு மையங்களின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *