52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
முதல்வர் விஜயை ஒருமையில் பேசிய விவகாரம்: அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

தவெக ஆட்சி அமைத்து 40 நாட்களே ஆகியுள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் , எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என அனைவரும் இணைந்து வருகின்றனர். இதனை எதிர்க்கட்சிகள் தவெக அரசு குதிரை பேரம் நடத்தி நிர்வாகிகளைக் கட்சியில் சேர்த்துக் கொள்வதாக குற்றம்சாட்டி வருகிறது.

முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய அனிதா

மறுபுறம் திமுக எம்.எல்.ஏக்கள் முதல்வரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 20-ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது பேசுகையில், முதலில் நடிகர் விஜயின் கட்சியைச் சேர்ந்த உறுப்பினருக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.. அவன் பேசுனான் அதன்பிறகு முன்னாள் போக்குவரத்துத்துறை பேசினார். அவரது பேச்சு எதிர்க்கட்சியினரை பதற வைத்தது.அந்த நேரத்தில் முதலமைச்சர் முகத்தில் எந்த உற்சாகமும் இல்லை.மூஞ்சை அப்படி தொங்கப்போட்டுவிட்டார். மற்ற அமைச்சர்களும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருந்தனர். இப்போதே இந்த நிலை என்றால், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும்போது முதல்வர் தூண்டை காணும்,தூணியை காணும் ஓடி போய்டுவான்.தொடர்ந்து பேசிய அவர், ஆஸ்டின் உரையாற்றியபோது முதலமைச்சரை நேரடியாக கேள்வி கேட்டதாகவும், அதற்கு முதலமைச்சரால் பதிலளிக்க முடியாமல் இருந்தான். நம்மளை கேட்குறதுக்கு இப்டடி வந்துட்டாங்களே? இப்படி வந்து நாம மாட்டிக்கிட்டோமே?

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு

மேலும், நம்ப ஜாலியா வீட்ல நடிகையோட இருந்தோம். ஆனா நம்மளை இப்போ கொண்டு மாட்டிவிட்டு உட்காரவச்சிட்டாரே அப்ப்புடினு சட்டமன்றத்தில் தவிக்குறாரு என்று கூறியிருந்தார். பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை எற்படுத்தியது. இதையடுத்து முதலமைச்சர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதைக்குறைவாகவும் அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் புகாரின் அடைப்படையில் திமுக சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேற்று கைது செய்தது.நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,தவெகவிற்கு செல்ல வேண்டும் என்ற வகையில், என்னை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தினார்கள்.

ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

ஆனால் அதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை.பொய் வழக்கு போட்டு என்னை அடக்கமுடியாது.காவல்துறை தரப்பில் இருப்பில் இருந்து தனக்கு அழுத்தம் கொடுக்கிறது. தவெக ஆட்சி 6 மாதம் கூட நீடிக்காது. எங்களிடம் குதிரைபேரம் நடக்காது. காவல்துறையினர் என்னை தாக்கினால், நானும் தாக்குவேன் என்று கூறினார். திமுக தலைவர் என்னை தைரியமாக இருக்க சொன்னார். எங்களிடம் குதிரை பேரம் இல்லை.. ஒட்டக பேரம் கூட நடக்காது.திமுகவில் வலுவாக இருப்போம். எவருக்கும் அடிபணிய மாட்டோம்,போலீஸ் அராஜகம் ஒழிக என்று அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். பின்னர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இதையடுத்து அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *