52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
எடப்பாடி பழனிசாமி கேம் பிளான் இதுதான்- அதிமுகவிற்கு யூ-டர்ன்: தவெகவிற்கு 365 நாள் செக் பாயிண்ட்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 172 இடங்களில் நின்று வெறும் 47 இடங்களில் வென்றிருந்தாலும், ஒரு கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 வாக்குகள் பெற்றிருந்தனர். தவெக, திமுக வரிசையில் மூன்றாவது இடம் கிடைத்தது. கடந்த 60 ஆண்டுகால அரசியலை புரட்டி போடும் வகையில் மும்முனை களத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. ஆனால் அதிமுகவில் இருந்து பல்வேறு தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்ச்சியாக தவெக பக்கம் நகர்ந்து வருகின்றனர்.

கரையும் அதிமுக, பலம் பெறும் தவெக

ஒருமுறை அல்ல, இரண்டு முறை அல்ல. வாரந்தோறும் சனிக்கிழமை தோறும் இணைப்பு விழா நடத்தும் அளவிற்கு சென்று கொண்டே இருக்கின்றனர். இத்தகைய அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளுக்கு மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன திட்டத்தில் தான் இருக்கிறார்? வெறுமனே ஆலோசனை கூட்டங்களை மட்டும் நடத்தி வருவதில் என்ன பயன்? கட்சி கரையாமல் இருக்க என்ன செய்யப் போகிறார்? ஏன் மவுனம் காக்கிறார்? போன்ற கேள்விகள் எழுகின்றன. இதுபற்றி பத்திரிகையாளர் சித்தார்த் பிரபாகரிடம் சமயம் தமிழ் சார்பாக பேசினோம்.

பத்திரிகையாளர் சித்தார்த் பிரபாகர் பேட்டி

அவர் கூறுகையில், க்கு இன்னும் மதிப்பிருக்கிறது. அதேசமயம் எடப்பாடி பழனிசாமி தான் சொல்வதை மட்டும் தான் கேட்டு நடக்க வேண்டும். கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் நான் தான் என்ற மனநிலையில் இருக்கிறார். பிடிக்கவில்லை என்றால் வெளியில் செல்லலாம். வேறு ஆட்களை வைத்து கட்சியை நடத்தி கொள்கிறேன் என நினைக்கிறார். ஆனால் ஆட்சியை பிடிக்கும் போட்டியில் இரண்டு கட்சிகள் தான் பிரதானமாக இருக்க முடியும் என்பதை கடந்த கால வரலாறுகளின் மூலம் பார்த்திருக்கிறோம்.

ஒரு வருஷம் வெயிட் பண்ணுங்க - ஈபிஎஸ் அட்வைஸ்

  • கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியலில் திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் அதிமுக தீவிரமாக இயங்கி வந்தது. அந்த இடத்தை தற்போது தவெக நிரப்ப முயற்சிக்கிறது. இதன் விளைவாக தான் அதிமுகவை கரைக்கும் வேலைகளில் மும்முரம் காட்டி கொண்டிருக்கின்றனர்.
  • இருப்பினும் ஓராண்டு வரை பொறுத்திருங்கள் என்று கட்சியினரை சமாதானம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
  • கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி. தவெக நிச்சயம் தவறு செய்யும். அங்கு புதியவர்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காத சூழல் வரும். உரிய மரியாதை அளிக்க மாட்டார்கள். அப்போது பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வருவர் எனப் பேசி வருகிறார்.
  • விஜய் அலை காரணமாக தான் 2026 தேர்தல் முடிவுகள் மாறின. இதை சரியாக கணிக்க தவறிவிட்டோம். அதற்காக அடுத்து வரும் தேர்தல்களிலும் இதேபோல் முடிவுகள் வரும் என சொல்லிவிட முடியாது.
  • அதிமுகவிற்கான எதிர்காலம் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக நம்புகிறார். அதனால் தான் கட்சி கரைவதாக தோற்றம் ஏற்பட்டாலும் சைலண்ட் மோடில் அரசியல் செய்து வருவதாக சித்தார்த் பிரபாகர் கூறினார்.

இளம் ரத்தம் பாய்ச்சுமா அதிமுக?

சோஷியல் மீடியா பாலிடிக்ஸ் அதிமுகவிற்காக வேலை செய்த தேர்தல் வியூக நிறுவனத்தை சேர்ந்த மூத்த அதிகாரியிடம் பேசிய போது, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருங்கள் என மூத்த தலைவர்களிடம் வலியுறுத்தினோம். ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொள்கிறோம். வேறு வகையில் டீல் செய்து விடுகிறோம் என்றனர். இந்த சூழலில் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.
கோட்டை விட்ட அதிமுக தற்போது கட்சியை பலப்படுத்துகிறேன் எனக் கூறி கொண்டு இளைஞர்களுக்கு பதவிகள் கொடுப்பது, ஜென் ஸி பாலிடிக்ஸ் செய்வது, புதியவர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பது என காய் நகர்த்துவதில் பலனில்லை. இவற்றை எல்லாம் 5 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், விஜய் வருகையால் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை திமுக ஏற்கனவே அடையாளம் கண்டு கொண்டு அந்த வழியில் பயணிக்க தொடங்கிவிட்டது. அதிமுக எப்போது விழித்துக் கொள்ளும் என்பதில் தான் அக்கட்சியின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *