52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
CSK – டிரேடிங்கில், சிஎஸ்கே வரும் தமிழக ஸ்டார் வீரர்: பெரிய குறையை சரி செய்யப் போகிறார்: முரட்டு டீல்

ஐபிஎல் 2027 சீசன், பல வீரர்களுக்கு மிகமுக்கியமான ஒன்றாக இருக்கிறது. அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர், 2028ஆம் ஆண்டில்தான் நடைபெறும் என்பதாலும், இதற்கான அணித் தேர்வு, ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடருக்கு பிறகுதான் துவங்கும் என்பதாலும், ஐபிஎல் 2027 சீசனில் சிறப்பாக செயல்பட்டால், உடனே இந்திய டி20 அணியில் இடம் பிடித்து, டி20 உலகக் கோப்பையில் ஆட முடியும் என்ற நிலைமை இருக்கிறது.இதனால், திறமையான வீரர்கள், தனக்கு ரெகுலராக பிளேயிங் 11-ல் இடம் கிடைக்காத அணியில் விலகி, உரிய முக்கியத்துவம் கொடுக்கும் அணிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அதில் ஒருவர்தான் சாய் கிஷோர். குஜராத் டைடன்ஸ் அணியைச் சேர்ந்த சாய் கிஷோர், ஒரு திறமையான ஆல்ரவுண்டர். பந்துவீச்சில் அசத்துவதுபோல், டெத் ஓவர்களின்போது பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடக் கூடியவர்.ஆனால், ஐபிஎலில் இம்பாக்ட் வீரர் விதிமுறை வந்தப் பிறகு, குஜராத் டைடன்ஸ் அணி, இவரை ஒரு பௌலராக மட்டுமே பயன்படுத்துகிறது. அதுவும், தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுப்பதில்லை. ஐபிஎல் 2025 சீசனில், 15 போட்டிகளில் விளையாடிய சாய் கிஷோர், அதில் அபாரமாக பந்துவீசி 19 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.பிறகு, ஐபிஎல் 2026 சீசனில், தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கவில்லை. மொத்தமே 3 போட்டிகளில்தான் விளையாட வைத்தனர். ஐபிஎல் 2025 சீசனில் சிறப்பாக செயல்பட்டவருக்கு, ஐபிஎல் 2026 சீசனில், சரியான வாய்ப்பு வழங்க முடியவில்லை. இவர், தொடர்ச்சியாக குஜராத் டைடன்ஸ் அணியில் நீடித்தால், அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்காது.இதனால், தற்போது சாய் கிஷோர் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து டிரேடிங்கில் வெளியேறி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இதுகுறித்து, குஜராத் டைடன்ஸிடம், சாய் கிஷோர் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடம் காலியாக இருக்கிறது. அங்கு சென்றால், பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் திறமையை நிரூபித்து, விரைவில் இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க முடியும். இதனால், எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, டிரேடிங்கில் சிஎஸ்கேவுக்கு செல்ல முடிவு செய்துள்ளேன். தயவு செய்து, எனது முடிவினை மதித்து, டிரேடிங்கில் அனுப்பிவிடுங்கள் என குஜராத் டைடன்ஸிடம், கிஷோர் தெரிவித்துவிட்டாராம்.இதனால், விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், குஜராத் டைடன்ஸ் அணி, பேச்சு வார்த்தையை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணி, எப்படியும் இளம் வீரர்களை விட்டுக்கொடுக்க முன் வராது என்பதால், இந்த பேச்சு வார்த்தையில், 2 கோடி மதிப்பில், சிஎஸ்கேவுக்கு சாய் கிஷோர் வரவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, தற்போது ஒரு திறமையான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார். பிரசாந்த் கிஷோரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனால், அவரை அணியைவிட்டு நீக்கும் முடிவில் சிஎஸ்கே இருக்கிறது. இந்நிலையில், சிஎஸ்கேவுக்கு தேவையான நேரத்தில், சாய் கிஷோர் தானாக முன்வந்து வர உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது, நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *