52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
இன்னும் 500 கோடி ஆண்டு..சூரியன் அழியும்போது பூமி சாம்பலாகுமா? புதிய விண்வெளி ஆய்வில் ஆச்சரிய தகவல்

காலைநிலை மற்றும் உலக மக்களில் தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக பூமி வெப்பமயமாதலை சந்தித்து வருகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் அளவுக்கு அதிகமான வெப்ப நிலை பதிவாகி உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டு உள்ளது. மேலும் 2012 ம் ஆண்டு சினிமாவில் உலகம் அழிய போகிறது என்ற பார்த்த பிறகு,எந்த் ஒரு இயற்கை நிகழ்வுகள் நடந்தாலும் பூமி அழிய போகிறதா என்ற கேள்வி நம்பில் பலருக்கு எழும். ஆனால் இந்த கற்பனைகளுக்கு மாற்றாக பூமி அழிவது குறித்து ஆச்சரியத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்சூரியன் அழியும்போது பூமியும் சேர்ந்தே அழிந்துவிடும் என்ற பொதுவான கருத்திற்கு மாறாக, பூமி இந்த நெருப்புப் பேரழிவிலிருந்து தப்பிப் பிழைக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது என்று நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.பெல்ஜியத்தின் கே.யு.லியூவன் வானியல் நிறுவனத்தைச் சேர்ந்த முதன்மை ஆராய்ச்சியாளரான மாட்ஸ் எசெல்டியர்ஸ் இதுகுறித்து கூறுகையில், சூரியனைப் போன்ற மாபெரும் நட்சத்திரங்களை இப்போது கவனித்ததில், பூமி அழியாமல் தப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாக தென்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் நிலை

எசெல்டியர்ஸ் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தை எட்டும்போது என்ன நடக்கும் என்பது குறித்து ஆய்வு செய்தனர். கணக்கீடுகளின்படி, இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியனின் மையப்பகுதியில் இருக்கும்முற்றிலும் தீர்ந்துவிடும். அதன் பிறகு, சூரியன் தற்போது இருக்கும் அளவை விட நூற்றுக்கணக்கான மடங்கு பெரிதாக விரிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சூரியன் முதலில் ஒரு சிவப்பு அரக்கன் நட்சத்திரமாக மாறும், பின்னர் அதைவிடப் பெரிய 'ஏஜிபி' (AGB) நட்சத்திரமாக வளரும். இறுதியாக, தன் ஆற்றலை இழந்து, ஒரு நட்சத்திரம் இறந்த பிறகு எஞ்சியிருக்கும் வெறும் கரிக்கட்டை போன்ற வெள்ளை குள்ளன் நட்சத்திரமாகச் சுருங்கி அதன் ஆயுள் முடிவுக்கு வரும்.சூரியனின் இந்த இறுதிக்கட்ட மாற்றங்கள், புதன், வெள்ளி மற்றும் பூமி ஆகிய கிரகங்களை ஒட்டுமொத்தமாகச் சாம்பலாக்கும் ஒரு கடுமையான வெப்பப் பேரழிவை உருவாக்கும் என்றே விஞ்ஞானிகள் நீண்டகாலமாக நம்பி வந்தனர். இருப்பினும், நட்சத்திரங்களின் பரிணாம மாதிரிகள் மற்றும் சூரியனின் எதிர்காலத்தை ஒத்திருக்கக்கூடிய 'எல்2 புப்பிஸ்' (L2 Puppis) என்ற அழியும் நிலையிலுள்ள அண்டை நட்சத்திரத்தை விரிவாக ஆராய்ந்த பிறகு, பூமி முற்றிலும் அழிய வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

இதன் மூலம் இரண்டு சாத்தியமான விளைவுகள் ஏற்படலாம் என கணித்துள்ளனர்:

  • சூரியன் பெரிதாக வளரும்போது, அதன் ஈர்ப்பு விசை (Gravitational tidal forces) பூமியைத் தன் பக்கமாக இழுத்து, இறுதியில் முழுமையாக விழுங்கிவிடலாம்.
  • மற்றொரு சாத்தியக்கூறாக, சூரியனின் விண்வெளிக் காற்று (Stellar wind) காரணமாக சூரியன் தனது நிறையை (Mass) மிக வேகமாக இழக்க நேரிடலாம்.
  • இதன் விளைவாக, அதன் ஈர்ப்பு விசை பலவீனமடைந்து, பூமி சூரியனால் விழுங்கப்படுவதற்கு முன்பாகவே அதை விட்டு விலகி தூரமான ஒரு சுற்றுப்பாதைக்குச் சென்றுவிடலாம்.
  • இறுதி முடிவு என்பது சூரியன் எவ்வளவு விரைவாகத் தனது நிறையை இழக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
  • பூமியின் விதியானது இந்த இரண்டு விளைவுகளுக்கு இடையே உள்ள ஒரு நுட்பமான சமநிலையைப் பொறுத்தது என்று எசெல்டியர்ஸ் விளக்கியுள்ளார். ஈர்ப்பு விசையின் தாக்கம் அதிகமாக இருந்தால் பூமி முழுங்கப்படும்
  • மாறாக, சூரியனின் நிறை இழப்பு அதிகமாக இருந்தால், பூமி பாதுகாப்பான தூரத்திற்கு விலகிச் சென்று தப்பித்துவிடும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *