52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
CSK – அணியின் பலவீனத்தை சரிசெய்ய, இந்த 35 வயது வீரரை 25 கோடி கொடுத்து வாங்கினாலும், ஒர்த் தான்

ஐபிஎலில், 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி, அதிகமுறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணியாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் சொதப்பியுள்ளது.இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது. நிலைமை இப்படியே தொடர்ந்தால், சிஎஸ்கே டம்மி அணியாக மாறிவிடும். இதனால், ஐபிஎல் 2027 சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது.ஆல்ரவுண்டர் தேவை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த காலங்களில், தொடர்ச்சியாக வெற்றிகரமான அணியாக இருக்க முக்கிய காரணம், மேட்ச் வின்னிங் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இருந்ததால்தான். ஷேன் வார்டன், டுவைன் பிராவோ போன்ற ஆல்ரவுண்டர்கள் தொடர்ச்சியாக, வெற்றிகரமான ஆல்ரவுண்டர்களாக இருந்தனர்.தற்போது, ஐபிஎல் 2027 சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுக்க வேண்டும் என்றால், மேட்ச் வின்னிங் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை. டிரேடிங்கில் ஹர்திக் பாண்டியா வருவதால், அவரை வாங்க சிஎஸ்கே முயற்சித்து வருகிறது. ஆனால், கேகேஆர் அணி நிர்வாகம், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோரை விடுவிக்க முன் வந்திருப்பதால், சிஎஸ்கேவுக்கு ஹர்திக் கிடைப்பது கஷ்டம்தான்.மற்றொரு திறமையான ஆல்ரவுண்டர் என்றால், அது மார்கோ யான்சன் தான். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது டெத் பௌலர் தேவைப்படுவதால், சிஎஸ்கே நிர்வாகம், நேதன் எல்லிஸை கொடுத்து, யான்சனை வாங்க முடியும். ஒருவேளை, இந்த டிரேடிங் டீலும் வெற்றிகரமாக நடக்கவில்லை என்றால், ஐபிஎல் 2027 சீசனுக்கான ஏலத்திற்குதான் சென்றாக வேண்டும்.ஏலத்தில், பென் ஸ்டோக்ஸ் வருவார். இவர், 35 வயதான வீரர் என்பதால், நீண்ட காலத்திற்கு இவரை அணியில் வைத்திருக்க முடியாது. இருப்பினும், சிஎஸ்கே தற்போது, எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் நிலைமையில் இல்லை. ஐபிஎல் 2027 சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுத்தாக வேண்டும். இதனால், அடுத்த ஒரு சீசனுக்காக பென் ஸ்டோக்ஸை வாங்குவதில் தவறில்லை. இவர், சமீபத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டதால், ஐபிஎலில் இவரால் புத்துணர்ச்சியுடன் விளையாடி, மேட்ச் வின்னராக இருக்க முடியும்.இந்த காரணத்தினால், பென் ஸ்டோக்ஸை வாங்க பல அணிகள் கடும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், பென் ஸ்டோக்ஸ் 25 கோடிக்கு கூட அசால்ட்டாக ஏலம் போக வாய்ப்புள்ளது. இதனால், பென் ஸ்டோக்ஸை வாங்க சிஎஸ்கே 25 கோடி வரை கூட செலவு செய்யும் நிலைமை ஏற்படும்.ஆகையால், சிஎஸ்கே இதற்கு தயாராகும் வகையில், பிரசாந்த் வீரர் உட்பட சில பெரிய தொகை வீரர்களை விடுவித்து, ஏலத்திற்கு அதிக தொகையுடன் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏற்கனவே கடந்த இரண்டு சீசன்களின் ஏலத்தின்போது படுமோசமாக சொதப்பி, முக்கிய வீரர்களை வாங்கவில்லை. அடுத்து, ஐபிஎல் 2027 சீசனுக்கான ஏலத்திலும், சிஎஸ்கே சொதப்பினால், சிஎஸ்கேவுக்கு அது கடும் பின்னடைவாக அமையும். இதனால், ஏலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து தற்போது இருந்தே திட்டம் தீட்டியாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *