52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
சம்பள பணத்தில் PPF கணக்கை தொடங்கி லட்சங்களில் சம்பாதிக்கலாம், அது எப்படி?

தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும், 15 ஆண்டுகள் வேலை செய்த பிறகும் தங்களுக்கு எந்தவிதமான சேமிப்பும் இல்லை என்று கூறுகின்றனர். 10 முதல் 15 ஆண்டுகள் பணிபுரிந்தும் அவர்களால் ஒரு வீட்டை வாங்குவதற்குத் தேவையான பணத்தை கூட சேமிக்க முடிவதில்லை. இதற்குக் காரணம், அவர்கள் பணம் சம்பாதித்தாலும் அதைச் சேமிக்கத் தவறியதே ஆகும். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு செய்வதில் ஒருவிதமான மோகம் நிலவுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளும் லாபத்தைத் தருவதில்லை. ஏனெனில், மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்த சரியான தகவல்கள் மற்றும் புரிதல் இருந்தால் மட்டுமே அதில் லாபம் ஈட்ட முடியும். ஆனால் பெரும்பாலானோருக்கு எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது என்பது தெரிவதில்லை.புதிய வேலையில் சேரும்போது இளைஞர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு பெரும்பாலும் இருப்பதில்லை. பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால் அவர்கள் தங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும். ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் சந்தை அபாயங்கள் மற்றும் உறுதியான வட்டி விகிதம் கிடைக்காத சூழல் ஆகிய சிக்கல்கள் உள்ளன. எனவே, தனியார் துறை ஊழியர்கள் தங்கள் முதல் சம்பளத்தை எங்கு முதலீடு செய்தால் அது இரட்டிப்பாகும் என்பது குறித்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முதல் சம்பளத்தில் கணக்கைத் தொடங்க வேண்டும்!

தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் முதல் சம்பளத்தைப் பெறும்போதே (PPF) கணக்கைத் தொடங்கினால், அவர்கள் பெரும் செல்வத்தைச் சேர்க்க முடியும். ஆனால் பலருக்கு PPF திட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை. வேலையில் சேரும்போதே சம்பளக் கணக்கு மற்றும் PF கணக்கு ஆகியவை தொடங்கப்படுகின்றன. ஆனால் PF கணக்கில் உள்ள பணம் தனிப்பட்டது. அது உங்கள் முதுமைக் காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம், PPF கணக்கு என்பது முற்றிலும் மாறுபட்டது. இதில் முதலீடு செய்வதன் மூலம் வெறும் 15 ஆண்டுகளில் நீங்கள் பெரிய தொகையைச் சேர்க்க முடியும். முதல் சம்பளத்துடனேயே PPF கணக்கைத் தொடங்கினால் உங்களிடம் லட்சக்கணக்கில் நிதி சேரும். இதன் மூலம் நீங்கள் சொந்தமாக வீடு வாங்குவது மட்டுமல்லாமல், பெரிய அளவிலான முதலீடுகளையும் மேற்கொள்ள முடியும்.

வெறும் 10,000 ரூபாய் சேமிப்பு போதும்!

உங்களுடைய 25ஆவது வயதில் முதல் வேலையைத் தொடங்கி ரூ. 30,000 சம்பளம் பெறும்போது, உங்கள் நிதிப் பொறுப்புகள் குறைவாக இருக்கும். உங்கள் சம்பளத்திலிருந்து மாதம் 10,000 ரூபாயை PPF கணக்கில் செலுத்தத் தொடங்கினால், ஓரே ஆண்டில் ரூ. 1.20 லட்சம் சேமிக்கலாம். இதன் மூலம் 15 ஆண்டுகளில் நீங்கள் ரூ. 18,00,000 சேமித்திருப்பீர்கள். இந்த முதலீட்டிற்கான நிலையான வட்டித் தொகை ரூ. 14,54,567 ஆக இருக்கும். இதனால் மொத்தத் தொகை ரூ. 32,54,567 ஆக உயரும். PPF கணக்குகள் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டியை வழங்குகின்றன. காலப்போக்கில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும்போது, கிடைக்கும் வட்டித் தொகையும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *