52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
RCB – மூன்று ஆர்சிபி வீரர்களுக்கு ஜாக்பாட்: இந்திய அணியில் இணைய அழைக்கும் பிசிசிஐ? செம்ம முடிவு

இந்திய அணிக்கு, தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்தப் பிறகு, இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பினை கொடுக்க விரும்புகிறேன் எனக் கூறி, டெஸ்ட், டி20 அணிகளை பலவீனப்படுத்தி வைத்திருக்கிறார்.முன்னெப்போதும் இல்லாத வகையில், கம்பீர் பயிற்சியாளராக வந்த உடனே சீனியர் வீரர்களை ஓரங்கட்ட ஆரம்பித்தார். ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள், டெஸ்டில் பேர்வெல் போட்டியை கூட ஆடாமல் வெளியேறினார்கள்.அதேபோல், டி20 உலகக் கோப்பை 2026 தொடர் முடிந்ததும் சூர்யகுமார் யாதவ், ஜஸ்பரீத் பும்ரா போன்றவர்களை வெளியேற்றிவிட்டு, முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணியாக மாற்றினார். இப்படி, திடீரென்று முழுக்க முழுக்க இளம் வீரர்கள் மட்டுமே இடம்பெற்ற நிலையில், டெஸ்ட், டி20 அணியில் படுமோசமாக சொதப்பி வருகிறது.பிசிசிஐ அதிரடி முடிவு: இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தப் பிறகு, நள்ளிரவில் இணைய வழியில் பிசிசிஐ மீட்டிங் நடைபெற்றது. அப்போது பேசிய பிசிசிஐ நிர்வாகிகள், ‘‘இந்திய அணிக்குள் திடீரென்று முழுக்கு முழுக்க இளம் வீரர்களை கொண்டு வந்ததுதான் பெரிய தவறு. இப்படி செய்து டெஸ்ட் அணியை முதலில் பலவீனப்படுத்தினோம். தற்போது டி20 அணியையும் பலவீனப்படுத்திவிட்டோம்’’‘‘அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியையெல்லாம் கட்டமைக்க தேவையில்லை. திறமைக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும். திறமையான சீனியர் வீரர்களை, வயது காரணமாக புறக்கணித்ததால்தான், தற்போது டெஸ்ட், டி20 அணிகள் பலவீனப்பட்டு கிடக்கிறது. இனியும் இப்படி நடக்க கூடாது. இனி, அணித் தேர்வு விஷயத்தில் தலைமை பயிற்சியாளரோ, கேப்டனோ தலையிடக் கூடாது. தேர்வுக்குழுவினர் மட்டுமே அணியை தேர்வு செய்ய வேண்டும்’’ என பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் ஒருமித்த குரலில் பேசியிருக்கதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால், வயது காரணமாக புறக்கணிக்கப்பட்ட, ஐபிஎல் மேட்ச் வின்னர்கள் க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ராஜத் படிதர் போன்றவர்களுக்கு, மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதைய இந்திய டி20 அணியில், திலக் வர்மா, அக்சர் படேல் போன்றவர்கள் சொதப்பி வருகிறார்கள். மேலும், ஒரு அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரும் இல்லை. இந்த குறையை சரி செய்ய, ஆர்சிபியின் க்ருணால் பாண்டியா, ராஜத் படிதர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் சரியான வீரர்களாக இருப்பார்கள்.பிசிசிஐ நிர்வாகிகளும் இதனை மனதில் வைத்துதான், இனி திறமையான சீனியர் வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனக் கூறியிருப்பதாக கருதப்படுகிறது.கம்பீர் பதவிக்கு வேட்டு: தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் செயல்பாட்டில், பிசிசிஐ திருப்திகரமாக இல்லை. டெஸ்ட், டி20 அணிகள் தற்போது மோசமான நிலையில் இருக்கின்றன. இதே நிலைமை தொடர்ந்தால், இந்தாண்டு இறுதிக்குள் கம்பீரை நீக்கிவிட்டு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து, விவிஎஸ் லக்‌ஷ்மனை தலைமை பயிற்சியாளராக நியமிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.கம்பீரின் பதவி காலம், ஒருநாள் உலகக் கோப்பை 0227 தொடர் வரை இருக்கிறது. அதாவது, இன்னமும் சுமார் 15 மாதங்கள் வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *