டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்திய அணி கோப்பை வென்றப் பிறகு, 6 போட்டிகளில் விளையாடி, ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக முதல் 4 டி20 போட்டிகளிலும் வெல்லவில்லை. அடுத்து, கடைசிப் போட்டி, ஜூலை 11ஆம் தேதி நடக்க உள்ளது.இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையிலேயே 0-3 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துவிட்டது. இதனால், இந்திய அணி மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தன் சொல்பேச்சு கேட்கும் இளம் வீரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார் என்ற விமர்சனமும் இருக்கிறது.இதனால், அடுத்தடுத்த டி20 தொடர்களில் அதிரடி கம்பேக்கை கொடுக்க வைத்து, கம்பீர் தன் மீது இருக்கும் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.இந்நிலையில், முதல் நான்கு டி20 போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், தொடரை இழந்தப் பிறகு நடைபெற்ற அணி மீட்டிங்கில் பேசிய கம்பீர், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், ‘‘உங்களிடம் இருந்து, இதனை எதிர்பார்க்கவே இல்லை. அயர்லாந்து டி20 தொடர், தற்போது இங்கிலாந்து டி20 தொடர். எதிலும், இதுவரை ஒரு வீரர் கூட தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடியது கிடையாது. இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது’’‘‘அணியில், மேட்ச் வின்னிங் வீரர்கள் இல்லை என்பதை இது வெளிகாட்டுகிறது. பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, உங்கள் இருவர் மீதும் பெரிய நம்பிக்கையை வைத்திருந்தேன். இதனால்தான், தேர்வுக்குழுவிடம் பேசி உங்களை அணிக்குள் கொண்டு வந்தேன். இனி, என்னால் எப்படி தேர்வுக்குழுவிடம் பேச முடியும். பேச என்ன இருக்கிறது? இனி, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றுதான் சொல்ல முடியும்’’ என கம்பீர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.மேலும், ‘‘சூர்யவன்ஷியும் என்னை ஏமாற்றிவிட்டார். அபிஷேக் சர்மா, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரை தவிர, பேட்டிங்கில் யார் மீதும் நம்பிக்கை ஏற்படவில்லை. இருவரை தவிர, யாருடைய இடமும் இன்னமும் நிரந்தரமாகவில்லை. இதனை புரிந்துகொண்டு விளையாடுங்கள்’’ என கம்பீர் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.திலக் வர்மா செயல்பாடு: டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இருந்தே திலக் வர்மாவின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. எதாவது ஒரு போட்டியில்தான் பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை அடிக்கிறார். இவரால், தொடர்ச்சியாக அதிரடியாக ஆட முடியவில்லை.டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு பிறகு அவரது டி20 ஸ்ட்ரைக் ரேட் 110.2ஆக குறைந்துவிட்டது. குறிப்பாக, ஸ்பின்னர்களுக்கு எதிராக 91.8 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ரன்களை அடிக்கிறார். இப்படிப்பட்டவருக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டது, அதிர்ச்சியில் அதிர்ச்சிகரமான விஷயமாக பார்க்கப்படுகிறது.பிரசித் கிருஷ்ணாவும் கூட, ஷார்ட் பால்களை அதிகமாக வீசி வருகிறார். தொடர்ச்சியாக குட் லெந்தில் பந்துவீச முடியவில்லை. இப்படி, இருவரும் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

