எஸ். ஜானகி மறைந்தார்: கானக் குயில் என்று ரசிகர்கள் கொண்டாடும் எஸ். ஜானகி நேற்று காலமானார். மைசூரில் இருக்கும் மகாராஜா கிரவுண்ட்ஸில் வைக்கப்பட்டிருக்கும் ஜானகியின் உடலுக்கு ரசிகர்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அஞ்சலி செலுத்துவதை பார்க்க முடிகிறது.இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு ஜானகி அம்மாவின் இறுதிச் சடங்கு கர்நாடக அரசு மரியாதை உடன் நடக்கிறது. இந்நிலையில் எஸ். ஜானகி அளித்த ஊக்கத்தால் பாடினேன் என்று சொல்லி வந்த எஸ்.பி.பி பற்றியும், கானக் குயில் பற்றியும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். எஸ்.பி.பி. வீடியோ: விழா ஒன்றில் ஜானகி அம்மா அருகில் நின்று கொண்டு எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிரித்த முகமாக தெரிவித்த விஷயத்தை தான் சினிமா ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து கண்ணீர் சிந்துகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. கூறியதாவது, ஜானகி அம்மா என்னை எப்பொழுதுமே சுப்பரமணியம் என்று தான் அழைப்பாங்க. ஆரம்பத்தில் இருந்தே அப்படித் தான். அவர் மாதிரி யாரும் என்னை அழைத்தது இல்லை. என்னை அடிக்க எல்லாம் செய்திருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் என்றார்.உங்களுடன் சேர்ந்து பாட மிகவும் பொருத்தமான பெண் குரல் பி. சுஷீலா, சித்ரா, ஜானகி ஆகியோரில் யாரென்று எஸ்.பி. பாலசுப்ரமணியத்திடம் கேட்டதற்கு ஜானகி அம்மா பெயரை தெரிவித்தார். இன்று காலையில் இருந்தே எஸ்.பி.பி.-ஜானகி பாடல்களை தான் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸுகள் கேட்டு ஃபீல் செய்து வருகிறார்கள்.ரசிகர்கள் கண்ணீர்: . அதற்குள் எங்கள் குழந்தை பருவத்தை அழகாக்கியவர்களில் ஒருவரான ஜானகி அம்மா இறந்துவிட்டார். இன்னும் ஒரு மரணத்தை தாங்கும் சக்தி இல்லை. இத்துடன் நிறுத்துக் கொள் இறைவா என 80ஸ், 90ஸ் கிட்ஸுகள் கூறி வருகிறார்கள். இளையராஜா அதிர்ச்சி: இந்நிலையில் ஜானகி இறந்த செய்தி அறிந்து துக்கம் அடைந்ததாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா. ரொம்ப அதிர்ச்சி அளிக்கும் செய்தி. சொந்த வாழ்க்கையில் எத்தனையோ தாங்க முடியாத துக்கங்கள், இழப்புகளை தாங்கிக் கொண்டு அவர் வாழ்ந்தார் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்கிறார் இளையராஜா. ஜானகி அம்மா மிகவும் கடினமான உழைப்பாளி. அவரின் இழப்பு இந்திய திரைப்பட சங்கீத உலகிற்கு மிகப் பெரிய இழப்பு. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவதாக கூறியிருக்கிறார் இசைஞானி. த்ரிஷா வருத்தம்: இளையராஜா இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் சேர்ந்து காலத்தால் அழியாத பல பாடல்களை பாடியிருக்கிறார் எஸ். ஜானகி. இந்நிலையில் 96 படத்தில் எஸ். ஜானகி தன் 88வது வயதில் இறந்துவிட்டார் என்கிற செய்தி வெளியானதில் இருந்து பலரும் அவரின் பாடல்களை கேட்டு வருகிறார்கள். இறந்தும் நம்மை எல்லாம் தன் குரல் மூலம் சிரிக்க வைக்கிறார், அழ வைக்கிறார். அவரின் குரலுக்கு மரணமே கிடையாது. உலகம் உள்ள வரை ஜானகி அம்மாவின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.

