52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
2015க்கு அப்புறம் இதுதான் சூடான ஜூலை மாசம்: வெயில் தாங்கல- தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த லிஸ்ட்

வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் கோடை வெப்பம் வாட்டி எடுக்கும். ஆனால் இம்முறை ஜூலை மாதம் வரை வெயிலை தாங்க முடியவில்லை. என்ன காரணம் என்று கேட்டால் பருவநிலை மாற்றம், சூப்பர் எல் நினோ என அடுக்கடுக்கான காரணங்களை முன்வைக்கின்றனர். தென்மேற்கு பருவமழை ஸ்டார்ட் ஆச்சுனு சொன்னாங்களே, அந்த மழை எங்க தான் இருக்கு. தமிழகத்தில் எந்த திசையிலும் எட்டி பார்த்தாலும் தென்படவில்லையே என்கின்றனர்.

வெதர்மேன் பிரதீப் ஜான் ஹாட் லிஸ்ட்

இந்த சூழலில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், காஞ்சிபுரம், திருவள்ளூர், , செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, கடலூர், நாகை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் மிகுந்த நாட்கள் தொடர்கின்றன. 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிக வெயில் அடிக்கும் ஜூலை மாதத்தை தற்போது தான் பார்க்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

ஜூலை 17 வரை வறண்ட வானிலை

  • அப்படியெனில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூலையில் வெயில் வெளுத்து வாங்குகிறது.
  • கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில் மழை எங்காவது எட்டி பார்க்குமா என்று இந்திய வானிலை ஆய்வு மையம் லேட்டஸ்டாக வெளியிட்ட முன்னறிவிப்பில் தேடிப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது.
  • நாளை (ஜூலை 13) முதல் வரும் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நிலவும்.
  • மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

தென்மேற்கு பருவமழை என்னாச்சு?

தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை நிலவரம் இதுதான் இந்நிலையில் தான் குறித்த கேள்வி எழுகிறது. கடந்த மாதமே தொடங்கிவிட்ட சூழலில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பலவீனமாகவே உள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் வானம் தெளிவாக காணப்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே சமவெளிப் பகுதிகளில் மதிய நேரங்களில் அடுத்த சில நாட்கள் கடும் வெயிலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எல் நினோ மேலும் தீவிரம் அடைகிறதா?

அதற்கேற்ப வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் இருந்தால் மதிய நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்துவது நல்லது. இதற்கிடையில் எல் நினோ குறித்த தகவல்களையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். பசுபிக் பெருங்கடலில் இது வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இந்த வானிலை மாற்றம் வளிமண்டலத்துடன் இணையத் தொடங்கியுள்ளது. எனவே இந்திய பெருங்கடலில் மேகமூட்டம் அற்ற மழையை தடுக்கக் கூடிய தீவிரமான வறண்ட வானிலை சூழலை நோக்கி தள்ளியிருக்கிறது. தமிழகத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு அதிகமான சூழல் தொடரும் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *