சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஐபிஎல் 2026 சீசனுக்கான ஏலத்தில், சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்படவில்லை.மேலும், ஐபிஎல் 2024, 2025 சீசன்களுக்கான ஏலத்திலும், சிஎஸ்கே சிறப்பாக செயல்படவில்லை. இதனால்தான், கடந்த மூன்று சீசன்களின் பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கேவால் முன்னேற முடியவில்லை. இந்நிலையில், சிஎஸ்கே அணி தற்போது, ஐபிஎல் 2027 சீசனுக்கான ஏலத்தில், தரமான வீரர்களை வாங்க தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது.ஹர்திக் பாண்டியா, சாய் கிஷோர் போன்றவர்களை ஏலத்தில் வாங்கி, அணியை பலமிக்கதாக கட்டமைக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த 2 வீரர்களுக்கு மாற்றாக, சிஎஸ்கேவிடம் இருந்து தரமான வீரர்களை அந்த அணிகள் எதிர்பார்க்கிறது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைடன்ஸ் ஆகிய இரு அணிகளும், தற்போது உர்வில் படேலை குறி வைத்துள்ளது.மும்பை இந்தியன்ஸ் விருப்பம்: ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, முன்பு ஷிவம் துபே, ஆயுஷ் மாத்ரே ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேட்டது. ஆனால், சிஎஸ்கேமோ ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்நிலையில், மாத்ரேவுக்கு பதில் துபேவுடன், உர்வில் படேலை அனுப்ப வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளதாம்.குஜராத் டைடன்ஸ் விருப்பம்: அதேபோல், குஜராத் டைடன்ஸும், சாய் கிஷோருக்கு மாற்றாக, உர்வில் படேல் வேண்டும் என கேட்டுள்ளதாம். சாய் கிஷோருக்கு மாற்றாக, மிடில் வரிசை பேட்டர் சர்பரஸ் கானை விடுவிக்க சிஎஸ்கே முன் வந்தது. குஜராத் டைடன்ஸுக்கும், மிடில் வரிசையில், நிலையாக ஆடும் ஒரு மிடில் வரிசை பேட்டர் தேவைப்படுகிறார். இதனால்தான், சர்பரஸ் கானை விடுவிக்க சிஎஸ்கே முடிவு செய்தது. ஆனால், குஜராத் டைடன்ஸ் நிர்வாகம், சாய் கிஷோருக்கு மாற்றாக உர்வில் படேல்தான் வேண்டும் என கேட்டுள்ளது.இப்படி, இரண்டு அணிகளும் உர்வில் படேலை கேட்டு நிற்பதால், தற்போது சிஎஸ்கேவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு ஷிவம் துபேவையும், டிவோல்ட் பிரேவிஸயையும் அனுப்பிவிட்டு, குஜராத்திற்கு உர்வில் படேலை கொடுப்பது குறித்து சிஎஸ்கே ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.உர்வில் படேல் அதிரடி: ஐபிஎல் 2026 சீசனில் உர்வில் படேல் அபாரமாக செயல்பட்டு, 10 இன்னிங்ஸ்களில் 205.21 ஸ்ட்ரைக் ரேட்டில், 197 ரன்களை குவித்து அசத்தினார். குறிப்பாக, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிராக, வெறும் 13 பந்துகளில் அரை சதம் அடித்து பிரமிக்க வைத்தார். இப்போட்டியில், மொத்தம் 23 பந்துகளில் 2 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 65 ரன்களை குவித்தார்.இப்போட்டியில், முதல் 8 பந்துகளிலேயே 6 சிக்ஸர்களை விளாசி, ஐபிஎலில், முதல் 8 பந்துகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இருப்பினும், ஆயுஷ் மாத்ரே மீண்டும் பிளேயிங் 11-ல் வந்துவிட்டால், இவருக்கு டாப் ஆர்டரில் இடம் கிடைக்காது. இதனால்தான், உர்வில் படேலை டிரேடிங்கில் அனுப்புவது குறித்து சிஎஸ்கே பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

