சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. இதனால், அணியின் மதிப்பு, பெரிய அளவில் சரிய ஆரம்பித்துள்ளது.குறிப்பாக, ஐபிஎல் 2026 சீசனுக்கான ஏலத்தில், தரமான வீரர்களை வாங்காமல், கடைசிவரை அதிக பணத்தை மீதம் வைத்திருந்தனர். பிறகு, வேறு வழியில்லாமல் பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகியோரை 14.20 கோடி கொடுத்து வாங்கினார்கள். ஆனால், இவர்களால் ஐபிஎல் 2026 சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அணியும், தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பியது.இதனால், ஐபிஎல் 2027 சீசனுக்கு முன், அணியை வலிமையாக கட்டமைக்க முடிவு செய்துள்ளனர். சிஎஸ்கேவுக்கு, தற்போது ஒரு மேட்ச் வின்னிங் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரும், மேட்ச் வின்னிங் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரும் தேவை. மேலும், ஒரு பினிஷரும் சிஎஸ்கேவுக்கு தேவைப்படுகிறார்.இதனால், இந்த குறைகளை டிரேடிங் மூலம் சரி செய்ய சிஎஸ்கே முயற்சி செய்ய ஆரம்பித்துள்ளது.வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தில் ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. ஹர்திக்கும் சிஎஸ்கே வரதான் விரும்புவதால், இவர் நிச்சயம் சிஎஸ்கே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றாக, ஷிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் கேட்கும் நிலையில், சிஎஸ்கே ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க தயக்கம் காட்டுகிறது. இருப்பினும், மேட்ச் வின்னிங் ஆல்ரவுண்டர் தேவைப்படுவதால், ஹர்திக்கை வாங்க, சிஎஸ்கே ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்திற்கு, குஜராத் டைடன்ஸ் அணியிடம் இருந்து சாய் கிஷோரை வாங்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. சாய் கிஷோருக்கு மாற்றாக, உர்வில் படேலை குஜராத் டைடன்ஸ் கேட்கிறது. ஆனால், சிஎஸ்கே நிர்வாகம், சர்பரஸ் கானை விடுவிக்க முன் வந்துள்ளது. இந்த டிரேடிங் பேச்சு வார்த்தை, தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும், பினிஷர் இடத்திற்கு, டெல்லி கேபிடல்ஸிடம் இருந்து அசுதோஷ் சர்மாவை வாங்க, சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்து, பேசி வருகிறதாம். அசுதோஷ் சர்மாவுக்கு மாற்றாக ராகுல் சஹாரை விடுவிக்க சிஎஸ்கே முன் வந்திருக்கும் நிலையில், இதுகுறித்து டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் பரிசீலித்து வருகிறதாம்.லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி நிர்வாகம், சிஎஸ்கேவிடம் இருந்து உர்வில் டேலை எதிர்பார்க்கிறது. சிஎஸ்கேவுக்கும், லக்னோவிடம் இருந்து, பிரசாந்த் வீருக்கு மாற்றாக, ஷாபஸ் அகமதுவை எதிர்பார்க்கிறதாம். இந்த பேச்சு வார்த்தை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பிரசாந்த் வீரை, 2 கோடிக்கு மட்டுமே வாங்க முடியும் என லக்னோ நிர்வாகம், திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. பிரசாந்த் வீரும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளராம்.இப்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், டிரேடிங்கில் 4 முக்கிய வீரர்களை வாங்க முயற்சி செய்து வருகிறார்கள். இந்த 4 டிரேடிங்கிலும் வெற்றிகரமாக முடிந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பலமிக்க அணியாக மாறிவிடும். மேலும், ஏலத்திலும் கூட பென் ஸ்டோக்ஸை வாங்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. இதுவும் வெற்றிகரமாக முடிந்தால், சிஎஸ்கே அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அசுர பலம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

