நேபாள வெள்ளப் பேரிடர்: 21 தமிழர்கள் மீட்பு! தாய்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை!

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், தமிழகத்திலிருந்து நேபாளத்திற்குச் சுற்றுலா சென்ற 21 தமிழர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளப் பேரிடரில் சிக்கிய தமிழர்களை நேபாள அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும், அங்கு நிலவும் மோசமான வானிலை மற்றும் சாலைப் போக்குவரத்து துண்டிப்பு காரணமாக அவர்கள் தாயகம் திரும்புவதில் கடும் சிக்கல் நீடித்து வருகிறது.

இதனிடையே, நேபாளத்தில் தவிக்கும் தங்களது குடும்பத்தினரைப் பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய மற்றும் மாநில அரசுகள் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என அவர்களின் உறவினர்கள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர். இதையேற்று இந்திய வெளியுறவுத் துறையும் நேபாள தூதரகமும் இணைந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top