மதக் காரணங்களால் ‘வந்தே மாதரம்’ பாடாவிட்டால் நடவடிக்கை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

‘வந்தே மாதரம்’ பாடலின் அனைத்து சரணங்களையும் கட்டாயமாகப் பாட வேண்டும் என்றும், அவ்வாறு பாடாதவர்களுக்குத் தண்டனை வழங்கும் விதியை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாட்டின் தேசியப் பாடலை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், ஒருவரது மதக் நம்பிக்கைகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அவர் ‘வந்தே மாதரம்’ பாடலை பாட மறுத்தால், அவர் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தேசப்பற்றைக் கட்டாயப்படுத்துவது சட்டத்தின் நோக்கமல்ல என்றும், ஒருவரின் மத சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் தண்டனைகள் வழங்கப்படக் கூடாது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். உச்ச நீதிமன்றத்தின் இந்த முக்கிய அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் சமூக ஆர்வலர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top