‘பணம் கட்டலாம்… பொருள் வராது!’ – இணையத்தில் வைரலாகும் இந்தியர்களின் விசித்திர ஷாப்பிங் மோகம்!

ஆன்லைன் ஷாப்பிங் உலகத்தில் தினமும் ஏதாவது ஒரு புதிய ட்ரெண்ட் உருவாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்தியர்களிடையே ‘ஆர்டர் செய்யலாம், ஆனால் பொருள் கைக்கு வராது’ என்ற விசித்திரமான ஆன்லைன் ஷாப்பிங் கலாச்சாரம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘ஃபுட் நெவர் கம்ஸ்’ (Food Never Comes) என்ற இணையதளம் இந்த வித்தியாசமான அனுபவத்தை பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த இணையதளத்தை, இதுவரை 27 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏதேனும் ஒரு உணவை ஆர்டர் செய்துவிட்டு, அது கைக்கு வராது என்று தெரிந்தே, ஒருவித ‘திரில்’ அனுபவத்திற்காக இளைஞர்கள் இதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பணத்தைச் செலுத்திய பிறகும் பொருள் கைக்கு வராது எனும் விசித்திர நிபந்தனையுடன் செயல்படும் இந்த தளம், தற்கால டிஜிட்டல் சமூகத்தின் மாறுபட்ட மனநிலையைப் பிரதிபலிக்கிறது. அன்றாட சலிப்பான வாழ்க்கையிலிருந்து சிறிது மாறுபட்டு, புதுமையான அனுபவத்தைப் பெறவே இதுபோன்ற வித்தியாசமான ட்ரெண்டுகளை இந்தியப் பயனர்கள் கொண்டாடி வருவதாக சமூக வலைதள வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top