பிரபல ஹாலிவுட் தொடரான ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த கனடா வாழ் தமிழ் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன், தனது அடையாளம் குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் பின்னணி குறித்துப் பேசிய அவர், “நான் ஒரு தமிழ்ப் பெண். எனது குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது. எனது கலாசாரம் தமிழ், எனது நாடு கனடா. இருப்பினும் எனது வேர்கள் இலங்கையில்தான் அமைந்திருக்கின்றன” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதங்களைத் தூண்டியுள்ளது.
அவர் தன்னை ‘தமிழ் ஈழப்பெண்’ என அடையாளப்படுத்தியதாகக் கூறி சில தரப்பினர் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வரும் நிலையில், அவரது தாய்மொழிப் பற்றையும் தெளிவான பார்வையையும் பாராட்டிப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஈழத் தமிழ் அடையாளமும், புலம்பெயர்ந்தோர் பின்னணியும் சர்வதேச அளவில் மீண்டும் ஒருமுறை பேசுபொருளாக மாறியுள்ளது.