பிரபல ஹாலிவுட் தொடரான ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ மூலம் உலகளவில் கவனத்தைப் பெற்ற கனடா வாழ் தமிழ் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன், தனது அடையாளம் குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நான் ஒரு தமிழ் பெண். எனது குடும்பத்தின் பூர்வீகம் இலங்கை. எனது கலாசாரம் தமிழ், எனது தாய்நாடு கனடா. என் வேர்கள் இலங்கையில் இருந்தாலும், என்னை ‘தமிழ் ஈழப்பெண்’ என்று அடையாளப்படுத்துவதையே விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மைத்ரேயியின் இந்த வெளிப்படையான பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஈழத் தமிழர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலர் இந்த அடையாளப் பிரகடனத்தைப் பாராட்டி வரும் வேளையில், மற்றொரு தரப்பினர் இவரது கருத்து குறித்து எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சர்வதேச அளவில் தமிழர்களிடையே இவரது அறிக்கை தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.