இரானின் தலைநகரான தெஹ்ரானில் இயங்கி வந்த சோவியத் தூதரகத்தின் குளியலறையில் நடந்த ஒரு ரகசிய சந்திப்பு, சர்வதேச உளவுத்துறை வரலாற்றிலேயே மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. சோவியத் யூனியனின் அதிகாரியாக இருந்த விளாடிமிர் குஜிச்கின், பிரிட்டனின் எம்.ஐ.6 (MI6) உளவு அமைப்பிற்காக இரகசியமாகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அவர் தெஹ்ரானில் மேற்கொண்ட ஆபத்தான உளவு நடவடிக்கைகள் மற்றும் சோவியத் யூனியனின் ரகசியங்களை பிரிட்டனுக்குக் கசியவிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் ‘ரெட்வுட்’ (Redwood) என்ற புதிய புத்தகத்தின் மூலம் விவரிக்கப்பட்டுள்ளன. குஜிச்கினின் ரகசிய உளவுப் பணிகள், பேராபத்துகள் நிறைந்த சூழல் மற்றும் இறுதியில் பசர்கான் எல்லை வழியாக அவர் உயிர்தப்பிச் சென்ற விறுவிறுப்பான சம்பவங்கள் வரை அனைத்தையும் இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
குளியலறையில் தொடங்கிய அந்த ஒரு ரகசிய உரையாடல், சோவியத் யூனியனுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதோடு, பனிப்போர் காலத்தில் பிரிட்டன் பெற்ற மிகப்பெரிய உளவுத்துறை வெற்றியாகவும் வரலாற்று ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.