“மாதம் ரூ.50 ஆயிரம் தருவதாக ஏமாற்றம்!” ஈரோடு நிறுவனத்தின் ரூ.1,400 கோடி மோசடியில் சிக்கிய ராணுவ வீரர்கள்!

ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய நிறுவனம் ஒன்று, “மாதம் ரூ.50,000 வீதம் வாழ்நாள் முழுவதும் ஊக்கத்தொகை வழங்கப்படும்” எனக் கூறி, சுமார் ரூ.1,400 கோடி அளவில் பிரம்மாண்ட நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் எல்லையில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை மட்டுமே பிரதான இலக்காக வைத்து இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

“இராணுவத்தில் உயிரைக் கொடுத்துச் சம்பாதித்த மொத்தப் பணமும் போய்விட்டது” என பாதிக்கப்பட்ட வீரர்கள் கண்ணீர்மல்க வேதனை தெரிவிக்கின்றனர். இந்த பிரம்மாண்ட மோசடி பின்னணி குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top