இஸ்ரேல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபை (Flydubai) விமானத்தில், காக்பிட் பகுதிக்குள் நடந்த நடுக்கமூட்டும் சம்பவம் குறித்த புதிய தகவல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) அரசு வழக்கறிஞர் வெளியிட்டுள்ளார். விமானத்தைக் கைப்பற்ற முயன்ற துணை விமானி ஒருவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை விமானி ஸ்மித் மச்சார் மீது கோடாரியால் கொடூரத் தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயணத்தின் போது திடீரென வன்முறையில் ஈடுபட்ட துணை விமானி, அவசரகாலப் பயன்பாட்டிற்காகக் காக்பிட்டில் வைக்கப்பட்டிருந்த கோடாரியைக் கொண்டு கேப்டன் ஸ்மித் மச்சாரைத் தாக்கியுள்ளார். எனினும், தீவிரமான காயங்களுக்கு மத்தியிலும் சாதுரியமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்ட கேப்டன் ஸ்மித், காக்பிட் கதவைத் திறந்து விமானத்தை பெரும் ஆபத்தில் இருந்து மீட்டுள்ளார்.
விமான பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து துணை விமானி நடத்திய இந்த கடத்தல் முயற்சி மற்றும் தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கைதாகியுள்ள அந்த துணை விமானி மீது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.