இந்தியாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் (S.I.R) நடைமுறைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தீவிரக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் பிரிட்டன் நாட்டின் முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள், இந்தியாவில் நடைபெறும் தேர்தல் நடைமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் அமைப்பின் வெளிப்படைத்தன்மை குறித்தும், தலைமைத் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகள் குறித்தும் வெளிநாட்டு ஊடகங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்திய உள்நாட்டு அரசியல் போராட்டங்கள் எல்லைகளைத் தாண்டி, பாகிஸ்தான் மற்றும் பிரிட்டன் போன்ற வெளிநாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருப்பது, தேசிய மற்றும் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.