இந்தியாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் (SIR) நடைமுறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து வரும் தீவிர போராட்டங்கள், தற்போது இந்திய எல்லையைக் கடந்து சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
குறிப்பாக, இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் பிரிட்டன் நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்கள், இந்திய அரசியலில் வெடித்துள்ள இந்த எஸ்.ஐ.ஆர் விவகாரம் குறித்து விரிவான கட்டுரைகளையும் விவாதங்களையும் வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மற்றும் தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை சர்வதேச ஊடகங்கள் எழுப்பத் தொடங்கியுள்ளன.
தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம், தற்போது உலக நாடுகளின் பார்வையிலும் முக்கியப் பேசுபொருளாக மாறியிருப்பது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.