230 அடி ஆழ்துளைக் கிணறு: 5 வயது குழந்தையைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்த 11 வயது சிறுவன்!

ஆப்கானிஸ்தானில் 230 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது குழந்தையை, பெரியவர்களால் மீட்க முடியாத நிலையில், 11 வயது சிறுவன் ஒருவன் துணிச்சலாக உள்ளே இறங்கி உயிருடன் காப்பாற்றியுள்ள சம்பவம் உலகளவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் திறந்தவெளியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர்கள் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் 5 வயது குழந்தை ஒன்று குறுகலான 230 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்தது. உடல் அளவு பெரியதாக இருந்ததால், மீட்புக் குழுவினராலும் பெரியவர்களாலும் அந்தச் குறுகிய இடைவெளிக்குள் இறங்க முடியவில்லை. இதனால் மீட்புப் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அப்போது, 11 வயது சிறுவன் ஒருவன் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் குழந்தையைக் காப்பாற்ற முன்வந்தான். கயிற்றின் உதவியுடன் கிணற்றின் ஆழத்திற்குச் சென்ற அந்தச் சிறுவன், மிகச் சாதுரியமாகச் செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டான். ஆப்கானிஸ்தானில் போதிய நவீன மீட்புக் கருவிகள் இல்லாததால், சிறார்களை மீட்க சக சிறார்களே தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் அவலநிலையும், அதேவேளையில் அச்சிறுவனின் இணையற்ற வீரமும் தற்பொழுது சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top