230 அடி ஆழ்துளைக் கிணற்றில் இறங்கி குழந்தையைக் மீட்ட 11 வயது சிறுவன்: ஆப்கானிஸ்தானில் நெகிழ்ச்சி சம்பவம்!

ஆப்கானிஸ்தானில் பெரியவர்களாலும் செய்ய முடியாத ஆபத்தான மீட்புப் பணியை 11 வயது சிறுவன் ஒருவன் வெற்றிகரமாகச் செய்து முடித்து உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான். அந்நாட்டில் 230 அடி ஆழமுள்ள குறுகிய ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை தவறி விழுந்தது.

ஆழ்துளைக் கிணற்றின் இடைவெளி மிகக் குறைவாக இருந்ததால், பெரியவர்களால் உள்ளே இறங்கி மீட்புப் பணியை மேற்கொள்ள முடியவில்லை. அப்போது, தன் உயிரைப் பொருட்படுத்தாமல் களமிறங்கிய 11 வயது சிறுவன், கயிறு மூலம் தொங்கியபடி 230 அடி ஆழத்திற்குள் தைரியமாக இறங்கினான்.

அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தான். ஆப்கானிஸ்தானில் இதுபோன்று ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கும் சிறார்களை மீட்க போதிய நவீன கருவிகள் இல்லாததால், பிற சிறுவர்களே தங்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபடும் சோகமான சூழல் நிலவி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top