அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கான ‘கிரீன் கார்டு’ பெறக் காத்திருக்கும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மீண்டும் ஒரு பெருஞ்சிக்கல் உருவாகியுள்ளது. அமெரிக்கக் தொழிலாளர் துறை, மைக்ரோசாப்ட், டிசிஎஸ் (TCS) உள்ளிட்ட எட்டு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ‘பெர்ம்’ (PERM – Program for Electronic Review Management) சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுவாக, H-1B விசாவில் அமெரிக்கா செல்லும் ஊழியர்கள் கிரீன் கார்டு விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கு இந்த பெர்ம் ஒப்புதல் மிகவும் அவசியமாகும். தற்போதைய புதிய கட்டுப்பாடுகளால், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் கிரீன் கார்டு விண்ணப்பச் செயல்முறை பெருமளவில் தாமதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால், அங்குப் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியும் கவலையும் நிலவி வருகிறது. உள்ளூர் வேலைவாய்ப்புகளை அமெரிக்கக் குடிமக்களுக்கே முன்னுரிமையாக வழங்க வேண்டும் என்ற தீவிரக் கொள்கை மாற்றமே இத்தகைய கெடுபிடிகளுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.