அமெரிக்காவில் இந்தியர்களுக்கு கடும் அதிர்ச்சி! கிரீன் கார்டு கனவைக் கலைக்கும் புதிய ‘பெர்ம்’ கட்டுப்பாடுகள்!

அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறி வாழ விரும்பும் இந்தியர்களுக்கு மேலும் ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் இயங்கி வரும் மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி 8 தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் புதிய ‘பெர்ம்’ (PERM) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால், ‘ஹெச்-1பி’ (H-1B) விசாவில் பணியாற்றி, கிரீன் கார்டுக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரும் கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.

பெர்ம் சான்றிதழ் என்பது அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களை நிரந்தரமாக வேலைக்கு அமர்த்துவதற்கு அந்நாட்டு நிறுவனங்கள் பெற வேண்டிய முக்கிய ஒப்புதலாகும். தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகளின் காரணமாக, வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டு செயல்முறைகள் பெருமளவில் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இது அங்குள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் எதிர்காலத்தையும், வேலைப் பாதுகாப்பையும் பெருமளவில் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top