52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசு – நீதிபதிகள் எழுப்பிய கேள்வி என்ன?

மீண்டும் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், தனி நீதிபதியின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அரசுத்தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2025 -ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த மிகப்பெரும் அரசியல் பிரச்சினைகளில் ஒன்று, திருப்பரங்குன்றம் தீப விவகாரம் ஆகும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு பெரும் பூதகரமாக மாறியுள்ளது.ராம ரவிக்குமார் உள்ளிட்ட மனுதாரர்கள், தர்கா மற்றும் அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் வழக்கை ஜூலை 27 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது அமர்வு.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக்கோரி ராம ரவிக்குமார் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இதே கோரிக்கை வைத்து பலரும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் காவல்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுகளை எதிர்த்து எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன. அரசுத்தரப்பில், " உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.அதற்கு நீதிபதிகள், "வைத்திருக்க விரும்புகிறீர்கள்? உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்? என கேள்வி எழுப்பினர்.அரசுத்தரப்பில், அது நோக்கம் அல்ல. 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதைத் தொடர்வதா புதிய முறையை தொடர்வதா என்பது குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.ராம ரவிக்குமார் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பிலும், தர்கா தரப்பிலும், அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் இந்த வழக்கை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.தொடர்ந்து, மதநல்லிணக்கம் முக்கியமானது என குறிப்பிட்ட நீதிபதிகள், " அங்கு வாழும் முக்கியமானது. கள நிலவரத்தை முழுமையாக அறிவார்கள். ஆகவே இரு தரப்பிலும் அமைதியான முறையில் என்ன செய்யலாம் என்பது தொடர்பாக முடிவு எடுக்க முயற்சிக்கலாம் என தெரிவித்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *