52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
பியூஸ் கேரியர் திருட்டு: அமைச்சர் நிர்மல் குமாரின் குற்றச்சாட்டு – பாயிண்டை பிடித்த சிவசங்கர்

சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆட்சியில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் மின்வெட்டு பற்றியும் ஆளுங்கட்சியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், சம்பந்தமாக சட்டமன்றத்தில் பேசியுள்ளது பெரியளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.தவெக ஆட்சி அமைத்து 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில், மின்வெட்டு பிரச்சனை மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிப்பதாக பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதோடு பொதுமக்களும் இரவு நேரங்களில் பல மணிநேரம் மின்வெட்டு ஏற்படுவதால் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் இன்றைய தினம் எதிர்க்கட்சிகள் மின்வெட்டு பிரச்சனை சம்பந்தமாக சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் மின்வெட்டு குறித்த கேள்விக்கு கடன் உள்ளதாகவும், ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு பியூஸ் கேரியர்கள் திருடப்படுவது பற்றியும் பேசினார். அவருடைய இந்த கருத்துகளுக்கு சட்டமன்றத்தில் வைத்தே பதிலடி கொடுத்து திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் பெரியளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.இது சம்பந்தமாக அவர் பேசுகையில், மின்சாரம், போக்குவரத்து ஆகியவை சேவை துறை. மக்களுக்கு சரியான முறையில் மின்சாரம் சென்று சேர்கிறதா என்பது முக்கியம். கடந்த ஆட்சி காலத்தில் இதே கடன், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளிட்டவையை வைத்து தான் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். கொரோனா பிரச்சனை, கடன் எல்லாவற்றையும் தாண்டி இதனை செய்தோம். மின்நிலையங்கள் உள்ளிட்டவையும் துவங்கினோம் என்றார். மேலும் சிவசங்கர் பேசுகையில், அமைச்சர் பியூஸ் கேரியர் திருடு போனது பற்றி சொன்னாரு. ஒரு சிறப்பான காட்சியை வெளியிட்டார். பகல் நேரத்தில் சிறப்பான வெயிலில் பியூஸ் கேரியர் திருடப்படுகிறது. அப்போ திருடு போனது. ராத்திரிக்கு தான் கரெண்ட் போகுது. எங்கயோ சர்க்யூட் கனெக்ட் பண்ணிட்டு, டைமர் செட் பண்ணி வைச்சு இருப்பாங்க போல. பகல் நேரத்தில் பியூஸ் கேரியர் திருடப்பட்டால், இரவில் 7 மணிக்கு மேல் கரெண்ட் போகிறது. இப்படி டைமர் வைக்க கூடிய பியூஸ் கேரியர் புதிதாக வந்துள்ளதா என்பது எங்களுக்கே சந்தேகமாகக உள்ளது. பியூஸ் கேரியரில் உள்ள காப்பரை திருடி இருக்கிறார்கள் என்று ஒரு புதிய கண்டுப்பிடிப்பை வெளியிட்டு இருக்கீங்க. இது தனியார், அரசு இரண்டுக்குமே நடப்பது. ஆனால் அந்த பியூஸ் கேரியர் திருடும் காட்சியை நீங்கள் தான் வெளியிட்டீங்க. அதற்கும், மின்வெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெளியில் பேசுவதை போன்று சட்டமன்றத்தில் பேச வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு மின்வெட்டு பிரச்சனை தொடர்பாக சிவசங்கர் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் பெரியளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் மின் வெட்டு பிரச்சனை தொடர்பாக பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக பெரம்பூர் தொகுதியை மின்வெட்டு பிரச்சனையில் நம்பர் ஒன்றாக மாற்றியுள்ளார் முதல்வர் விஜய் என கிண்டலடித்து அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *