52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
உறுப்பினர் சேர்க்கையில் சாதனை.. அண்ணாமலைக்கு இளைஞர்கள் அலைமோதும் ஆதரவு- அரசியல் கணக்கு

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதில் கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்படும் பெயராக அண்ணாமலை மீண்டும் மாறியுள்ளார் . இதற்கு காரணம் அவர் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகியது. பின்னர் அவரது அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கம் எதிர்பாராத அளவுக்கு கவனத்தை பெற்று வருகிறது.

அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம்

அண்ணாமலைஎன்ற பெயரில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே 18.52 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துள்ளதாக வெளியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்ககளில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக இது இளைஞர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.அண்ணாமலை தனது புதிய அரசியல் பயணத்தை போது அது வெறும் ஆதரவாளர்களின் உற்சாகமாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் இயக்கம் தொடங்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக பதிவு செய்ததாக தகவல்கள் வெளியானது.அதன்பிறகு உறுப்பினர் சேர்க்கை வேகம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்தது.சில நாட்களிலேயே 10 லட்சத்தை கடந்த உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 18.52 லட்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இது நம்ம இயக்கம் உறுப்பினர் சேர்க்கை

குறிப்பாக சமூக வலைதளங்கள் இணையதள பதிவு முகாம்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் இந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசியலில் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த தலைவர்களில் யும் ஒருவர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பின்னணி, நேரடியான பேச்சு, ஊழலுக்கு எதிரான கருத்துக்கள், சமூக வலைதளங்களில் தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட பயணங்கள் ஆகியவை அவருக்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கின.அதனால் தான், பாஜகவை விட்டு வெளியேறிய பிறகும் அவரது ஆதரவாளர்கள் சிதறாமல் அவருடன் தொடர்கிறார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தற்போது புதிய இயக்கத்தில் இணையும் பெரும்பாலானோர் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் அண்ணாமலை தாக்கம்

இதனைத் தொடர்ந்து பாஜக முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை புதிய இயக்கத்தில் இணைந் தனர். இது இளைஞர் வாக்காளர்களை மையமாக வைத்து அரசியல் அமைப்பை உருவாக்கும் அவரது திட்டம் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து புதிய முகங்கள் இந்த இயக்கத்தில் இணையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை உயர்வது ஒரு அரசியல் இயக்கத்தின் ஆரம்ப வெற்றியாக பார்க்கப்பட்டாலும், அதை தேர்தல் வாக்குகளாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். தற்போது தமிழக அரசியலில் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் வலுவான அமைப்புகளுடன் செயல்பட்டு வருகின்றன.இந்த சூழலில், அண்ணாமலையின் புதிய இயக்கம் வெறும் உறுப்பினர் எண்ணிக்கையைத் தாண்டி, தேர்தல் அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.ஒருபுறம் உறுப்பினர் சேர்க்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மறுபுறம் அரசியல் தலைவர்களின் கவனமும் இந்த இயக்கத்தின் மீது திரும்பியுள்ளது. இந்த ஆதரவை அரசியல் சக்தியாக மாற்ற அண்ணாமலை வெற்றி பெறுவாரா? அல்லது இது ஆரம்பகட்ட உற்சாகமாகவே முடிந்துவிடுமா? என்பதற்கான பதில் வரும் மாதங்களில் தமிழக அரசியலில் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *