மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக மதிமுக வெளியேறியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு அளிக்கவும் மதிமுக முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வைகோ தெரிவித்துள்ள கருத்து ஒன்று மிகப்பெரிய அளவில் தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.அதாவது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு நான்கு சீட்டுகள் ஒடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இதில் சீர்காழி, கடையநல்லூர் தொகுதியில் மதிமுகவினர் வெற்றி பெற்றது. இதனிடையில் மதிமுக தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்த நிலையில், அக்கட்சியை சார்ந்த எம்எல்ஏக்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள்.தொடர்ந்து தவெக ஆதரவுடன் இடைத்தேர்தலில் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வெற்றி பெற்றதால், அவர்களால் தமிழக வெற்றி கழகத்துக்கு நேரடியாக ஆதரவு அளிக்க முடியாது. அதன் காரணமாக தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தலில் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டது. இதுக்குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களிடமும் பேசியுள்ளார்.அதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் இருந்து மதிமுகவின் இரண்டு எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யலாமே என்று பேசியதாக வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார் வைகோ. அதோடு இரண்டு உறுப்பினர்களை ஜெயிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு. இடைத் தேர்தலில் நானே வந்து அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன் என்று விஜய் சொன்னதாகவும் வைகோ தற்போது போட்டுடைத்துள்ளார்.இதனையடுத்து ஒரு முதல்வரே எப்படி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொல்லலாம் என்ற கேள்விகள் வலுக்க துவங்கியுள்ளன. அதோடு தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றசாட்டுகளுக்கு வலு சேர்க்கும் விதமாகவும் வைகோவின் இந்த ஸ்டேட்மெண்ட் அமைவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் பெரியவில் சர்ச்சைகளை கிளப்ப துவங்கியுள்ளது.இந்நிலையில் யூடியூப்பரும், அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், “வைகோ கூறியது 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால் அந்த இரண்டு உறுப்பினர்களையும் மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு” என்று என்னிடம் விஜய் உத்தரவாதம் அளித்தார். இதன் மூலமாக விஜய் நேரடியாக குதிரை பேரம் நடத்தி வருகிறார்.அவர்களாக பதவி விலகுகிறார்கள் என்று ஆதவ் முதல் அனைத்து தவெக கும்பலும் இத்தனை நாட்களாக சொன்னது பொய் என விமர்சனம் செய்துள்ளார். அதோடு இதில் என்ன குறைந்தபட்ச நேர்மை இருக்கு விஜய்? என்ற கேள்வியையும் தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார் மாரிதாஸ். அவருடைய இந்த பதிவு தற்போது தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. மேலும் பலரும் வைகோவின் பேச்சு குறித்து இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

