மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்களில் 190/7 ரன்களை அடித்த நிலையில், இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19 ஓவர்களில் 191/6 ரன்களை எடுத்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.இப்போட்டியில், இந்திய அணி செய்த மூன்று முக்கிய தவறுகள் குறித்து பார்க்கலாம்.நிதான ஆட்டம்: மான்செஸ்டரில் 192 ரன்கள்தான் சராசரி ஸ்கோர். வெற்றியைப் பெற வேண்டும் என்றால், 210+ ரன்களை அடிக்க வேண்டும் என புள்ளி விபரம் தெரிவித்தது. இதனால், இந்திய அணியினர் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், ஒன்டவுன் பேட்டர் இஷான் கிஷன், தொடர்ச்சியாக நிதானமாக விளையாடி, 40 பந்துகளில் 49 ரன்களைதான் அடித்தார். இவர், 40 பந்துகளில் 65 ரன்களை அடித்திருந்தாலும், இந்திய அஇ நிச்சயம் வென்றிருக்கும் எனக் கருதப்படுகிறது.ரவி பிஷ்னோயின் ஓவர்: இங்கிலாந்து அணி, 16 ஓவர்கள் முடிவில் 142/5 ரன்களைதான் அடித்திருந்தது. கடைசி 4 ஓவர்களில் 49 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், ஆட்டம் கடைசி ஓவர், கடைசி பந்துவரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17ஆவது ஓவரில், ரவி பிஷ்னோய் 29 ரன்களை வாரி வழங்கி சொதப்பினார்.குறிப்பாக, சைட் கிரிஸில் கால் வைத்து, 2 நோபால்களை வீசிய நிலையில், அந்த இரண்டு பிரிஹிட் பந்துகளிலும் சிக்ஸர்களை விளாசினார்கள். இந்த ஓவரில், மொத்தம் 8 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி பறந்தது. இப்படி, அந்த ஓவரில 29 ரன்கள் கசிந்ததுதான், தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.அர்ஷ்தீப் சிங் ஓவர்: இங்கிலாந்து அணி, முதல் 2 ஓவர்களில் 11 ரன்களைதான் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, 3ஆவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், ஹேரி ப்ரூக்கிற்கு எதிராக 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரி என மொத்தம் 27 ரன்களை அடிக்கவிட்டார். இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.ஸ்கோர் விபரம்: முதலில் களமிறங்கிய இந்திய அணியில், வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக செயல்படவில்லை. 10 பந்தில் 14 ரன்களை மட்டும் எடுத்து அவுன் ஆனார். அடுத்து, அபிஷேக் சர்மா, தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடி, 24 பந்தில் 43 ரன்களை அடித்த நிலையில், அடுத்து,இ ஷான் கிஷன் 40 பந்தில் 49 ரன்களை சேர்த்தார். பிறகு, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 22 பந்தில் 37 ரன்களையும், திலக் வர்மா 11 பந்துகளில் 24 ரன்களையும் எடுத்து அசத்தினார்கள்.இதனால், இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 190/7 ரன்களை குவித்து அசத்தியது. இங்கிலாந்து அணி பௌலர், சாம் கரண், 4 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.இங்கிலாந்து இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஓபனர்கள் டக்அவுட் ஆனார்கள். பிலிப் சால்ட் கோல்டன் டக் ஆன நிலையில், ஜாஸ் பட்லர், 3 பந்துகளை எதிர்கொண்டு டக்அவுட் ஆனார்.பிறகு, கேப்டன், ஹேரி ப்ரூக் 15 பந்துகளில் 39 ரன்களையும், ஜாகப் பெத்தல் 46 பந்துகளில் 76 ரன்களையும், டாம் பான்டன் 32 பந்துகளில் 39 ரன்களையும் சேர்த்தார்கள். இறுதிக் ட்டத்தில், ஜோப்ரா ஆர்ச்சரும் 7 பந்தில் 10 ரன்களை எடுத்ததால், இங்கிலாந்து அணி, 19 ஓவர்கள் முடிவில் 191/6 ரன்களை எடுத்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.

