52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
திமுக-வுடன் உறவில்லை என அறிவித்தது ஸ்டாலின் தான், நான் அல்ல – திருமாவளவன் ஆவேசப் பேச்சு

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சி வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். குறிப்பாக முதல்வர் விஜய் ஆட்சி அமைக்க தனி பெரும்பான்மை இல்லாததால் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ், இந்தியன் முஸ்லிம் லீக் ,இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தனர்.

விசிக திமுக கூட்டணி முறிவு

இந்த சூழலில், ஆதரவளித்த கட்சிகளுக்கு தமிழக வெற்றிக்கழக அரசு அமைச்சரவையில் இட ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், இந்தியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, , மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடுத்தடுத்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது.இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் சமீபத்தில் தனியார் விடுதி ஒன்றில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது தோழமைக் கட்சிகள் புதிய கூட்டணியை உருவாக்கி, இடைத்தேர்தலையும், உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்க வேண்டி உள்ளது. இதனால்யில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

திருமாவளவன் கூட்டணி பேச்சு

இந்த சூழலில் தான் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக திமுக மதசார்பற்ற கூட்டணியில் அங்கு வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகுவதாக தகவல்கள் வெளியானது. மேலும் திமுக கூட்டணியில் இருந்த போது நான்கு தேர்தல்களில் விசிக வெற்றி பெற்றது. தற்போது விசிகவும், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பேச்சுக்கள் அடிபட்டது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் விசிக சார்பில் விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சியில் பேசிய தொல். திருமாவளவன் கூட்டணி குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இல்லை என்று திமுக தலைமையை அறிவித்து விட்டது. நான் கூறவில்லை. இதுவரையிலும் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நான் ஒருபோதும் கூறியதில்லை.

விஜய் அமைச்சரவையில் விசிக-வுக்கு இடம்

அதே போல் தமிழக வெற்றி கலக கூட்டணியில் இணைகிறோமா என்ற கேள்விக்கும் நான் பதில் அளிக்கவில்லை முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளது. புதிய கூட்டணிகள் உருவாக்குவது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம் இன்னும் அங்கு எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அங்கு இடம்பெறுவோம். இதனை தெரிவிப்பதற்கு எனக்கு எந்த ஐயமும் இல்லை. இதை ஏன் நான் இப்போது சொல்கிறேன் எனறால், தவெக அமைச்சரவையில் விசிகவுக்கு இடம் ஒதுக்கிய போதே திமுக தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடி இணைத்த போது திமுக தலைமை சொல்லுகிறது விசிக எங்களுக்கு உறவில்லை என்று கூறினார்கள். இதுவரை நான் கூறவில்லை. திமுக கூட்டணியில் விசிக இல்லை என்று கூறியது யார்முதலமைச்சர் அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தான்.

புதிய அரசியல் நகர்வு!

தொடர்ந்து பேசிய எனது மதிப்புக்குரியவர் நீதான மதிப்பு என்றைக்கும் குறையாது. அது வேறு. பாஜகவில் இருக்கிற தலைவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறவன் திருமாவளவன். பாஜகவில் இருக்ககூடிய தலைவர்களுக்கு மரியாதை கொடுக்குகூடிய நபர் தான் . அரசியல் கொள்கை எதிரியே தவிர, தனிநபர் பகை கிடையாது.பாஜகவில் இருக்க கூடிய தமிழிசை எங்கே வந்தாலும் தேடிப்போய் வணக்கம் சொல்லுகிறவன் நான் அண்ணன் பொன்னார் அவர்கள் வண்டியை நிறுத்தி விட்டு ஓடி போய் அவருக்கு கை கொடுக்கிறவன் திருமாவளவன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *