52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
எம்எல்ஏ திருடர்கள்.. ஒரிஜினல் களவாணி: முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு டிடிவி தினகரன் கடும் பதிலடி

நேற்றைய தினம் கரூர் சென்ற முதல்வர் எதிர்க்கட்சியான திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு அக்கட்சியை சார்ந்தவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவில் இருந்து ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் விஜய்யின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் , முதல்வரின் கரூர் பேச்சுக்கு கட்டும் பதிலடியை பதிவு செய்துள்ளார்.கரூர் மக்கள் சந்திப்பில் நேற்றைய தினம் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், கடந்தாண்டு நடந்த துயர சம்பவம் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதாவது கரூர் துயரத்திற்கு காவல்துறை தான் காரணம் என்பதை போன்று அவரின் பேச்சு அமைந்து இருந்தது. அதே போல் திமுக, அதிமுக கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்தன. இரண்டு கட்சிகளும் கூட்டு களவாணிகள் எனவும் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.அவருடைய இந்த பேச்சு திமுக, அதிமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதல்வரின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் பேச்சு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், ஒரு முதலமைச்சர் களவாணி என்று பேசுகிறாரே, இதே போல் அவரை பார்த்து சொல்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும். விஜய் தான் களவாணி. நம்ம ஊர்ல ஆடு திருடன், மாடு திருடன் என்று சொல்வாங்க. எங்க ஊர்ல சிலர் ஆடு மட்டும் தான் திருடுவான். சிலர் மாடு மட்டும் திருடுவான். அதே போல் எம்எல்ஏ திருடர்கள் நீங்கள். எம்எல்ஏ களவாணி. முதன் முறையாக அமமுக எம்எல்ஏவை ஆசை வார்த்தை காட்டி திருடுனீங்க. இதை எதற்காக அடிக்கடி சொல்கிறேன் என்றால் உண்மையாக நடந்தது.ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட அந்த லெட்டர் போர்ஜரி. இப்படி ஆட்சி அமைப்பதற்கே தகிடு தத்தங்கள் செய்தவர்கள். எங்கள் அமமுக எம்எல்ஏவை குதிரை பேரம் செய்யவில்லை என்று ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். இதில் யார் எம்எல்ஏ களவாணிகள். இப்படி மற்ற கட்சிகளை வெற்றி பெற்ற அகம்பாவத்தில் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் டிடிவி தினகரன்.அதே போல் எம்ஜிஆரின் அன்பு, ஜெயலலிதாவின் வீரத்தையும் விஜய்யிடம் பார்க்கிறேன் என்று எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியது குறித்து கருத்து தெரிவித்த அவர், அப்படி சொல்ல சொல்லி இருப்பாங்க. எதுக்காக அவர் இபிஎஸ் மீது கோபம் இருந்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சிக்கு போக வேண்டிய தேவை இருக்கிறதா? விஜய்யை விடவும் எனக்கு அழகான தமிழில் பதில் சொல்ல தெரியும். இவர்களை எல்லாம் அங்கு வர வைப்பது எதுவென்று எனக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், திமுக - அதிமுக ஆட்சி அமைக்க இருந்தார்கள். ரெண்டு பேரும் கூட்டணி களவாணிகள் சொல்றார். நீங்க பண்ணி இருக்கிறதே களவாணி வேலை தானே. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை களவாணி அவர்கள் ஆதரவுடன் அமைச்சர் பதவி கொடுத்து ஆட்சி அமைத்து இருக்கிறீர்கள். அமமுக எம்எல்ஏவை களவாண்டு தான் லெட்டர் வாங்கி கொடுத்தீங்க. ஆறு பேரை ராஜினாமா செய்ய வைத்ததே களவாணித்தனம் தானே. எனவே உண்மையான ஒரிஜினல் களவாணி திரு. விஜய் அவர்கள் தான் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் டிடிவி தினகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *