52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
அதிமுகவில் மீண்டும் வெடித்த சர்ச்சை: எம்பி இன்பதுரை vs சோலை ராஜா – களக்கத்தில் தலைமை

குறித்த அதிமுக எம். பி. இன்பதுரை பேச்சுக்கு, அதிமுக மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த கண்டனத்தை தெரிவிப்பதால் அதிமுக தலைமை சார்பில் கட்சி நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க தயார் எனவும் தெரிவித்து உள்ளார்.

விளையாட்டு சங்க ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் மதுரை விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

  • தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு மைதானங்களில் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு வசூலிக்கப்படும் மாதாந்திர கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுப்புவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

எம். பி. இன்பதுரை பேசுக்கு சோலை ராஜா கண்டனம்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி அதிமுக மாமன்ற குழு தலைவர் மதுரை மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சோலை ராஜா, பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தலைமை நடவடிக்கை எடுத்தால் சந்திக்க தயார்

தமிழக வரலாற்றிலேயே ஒரு விளையாட்டு வீரர், விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பது த. வெ. க. ஆட்சியில் தான். அதனால் இந்த கண்டனத்தை தெரிவிப்பதால் அதிமுக தலைமை சார்பில் கட்சி நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்க தயார் என்று திட்டவட்டமாக கூறினார்.

விளையாட்டு வீரர் - விளையாட்டுத் துறை அமைச்சர்

தமிழ்நாடு , விளையாட்டு சங்கங்களின் பொறுப்புகளில் இருந்து பதவி விலக வேண்டும் என சொல்வதற்கு, மதுரை மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி அதிமுக மாமன்ற குழு தலைவர் சோலைராஜா பேட்டி அளித்து உள்ளார்.

அதிமுகவில் மீண்டும் வெடித்த சர்ச்சை

அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சிப் பூசல் நிலவி வந்த சூழலில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *