
திருவண்ணாமலையில் திடீர் ஆய்வு
தொடர்ந்து கிரிவலப் பாதையில் பஞ்சமுக தரிசனம் அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குறித்து கேட்டு அறிந்தவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் இனிவரும் காலங்களில் அதிகரித்து தான் இருக்கும் என்று கூறியவர். சரியான திட்டமிடல் வேண்டும் என்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலத்தில் சரியான திட்டமிடல் இல்லாததால் தான் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததாகவும் கூறினார்.சென்னையில் இருந்து க்கு வரக்கூடிய இரண்டு வழி சாலைகள் நான்கு வழி சாலைகளாக மாற்றுவது குறித்து ஆலோசனைகளும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது . அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் மிகுந்த பாதுகாப்புடன் வரவழைக்கப்பட்டு தரிசனம் செய்து வெளியேற்றுவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது என்றும் பக்தர்களின் வசதிக்காக புதிய திட்டம் உருவாக்குவதற்கான அனைத்து ஆலோசனைகளும் விவாதிக்கப்பட்டது என்றார்.
13 முதல் 18 வயது சிறுமிகள் கர்ப்பம்..
வட மாவட்டங்களில் முக்கியமான பிரச்சினையாக கருதக்கூடிய கள்ளச்சார விவகாரத்தில் இன்னும் பல்வேறு கிராமங்களில் அரசியல் பின்புலத்துடன் இருப்பதாகவும், முற்றிலும் ஒழிப்பதற்கு காவல்துறை கள்ளச்சாராயத்தை முழுமையாக நிரந்தரமாக ஒழிப்பதற்கு சுதந்திரமாக செயல்பட உத்திரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திருவண்ணாமலையை சுற்றி கஞ்சா அதிகரித்திருப்பதாகவும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்றும் அவர் எச்சரித்தார். தொடர்ந்து பேசியவர் குழந்தை திருமணச் சட்டத்தை முழுமையாக பின்பற்றும் மாநிலமான தமிழ்நாட்டில் குறிப்பாக திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13 முதல் 18 வயது உள்ள பெண்கள் தற்பொழுது 1000 முதல் 1200க்கும் மேற்பட்ட பெண்கள் கருவுற்றல் தொடர்ந்து நடைபெறுவதாகவும் கூறியவர் இதனால் அவர்கள் உயர்கல்வி தொடர முடியாமல் அவதிப்படுவதாகவும் இது போன்ற நிகழ்வு பல்வேறு குக் கிராமங்களில் பெண் கல்வியில் விழிப்புணர்வு இல்லாததால் இது போன்ற நிகழ்வு நிகழ்வுவதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் வெளியிட்ட புள்ளிவிவரம்
சினிமா பிரபலங்கள் விளையாட்டு துறையை சேர்ந்தவர்களை வைத்து பெண் கல்வி குறித்தும் பெண்கள் கருவுற்றல் குறித்தும் விரைவில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் எனவும் அவர் தெரிவித்த அவர் தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழக அரசும் நாங்களும் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்றும் அவர் கூறினார். திருவண்ணாமலையின் வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்க அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து பாடுபடுவோம் என்று கூறியவர் கிரிவலப் பாதையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விரைவில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். வேளாங்கண்ணி திருச்செந்தூர் அடுத்து திருவண்ணாமலை உடைய பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்றார் போல புதிய திட்டத்தை வடிவமைத்து அதற்கான நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆர்ச்செரி கால்பந்து பாக்சிங் மலர் கம்மம் போன்ற விளையாட்டுக்கள் இல்லை . இப்பகுதிக்கான மண் சார்ந்த விளையாட்டு விரைவில் ஏற்படுத்தப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இது போன்ற விளையாட்டுக்கள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
