52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
IND vs AFG 1st ODI – உலகின் நம்பர் 1 வீரர்: வரலாறு படைத்த குர்பாஸ், கோலி கூட இப்படி செய்ய முடியல

தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.மழை காரணமாக, ஆட்டம் 25 ஓவர் கொண்ட போட்டியாக மாறியது. இதில், முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 24.5 ஓவர்கள் முடிவில் 194/10 ரன்களை எடுத்தது.குர்பாஸ் சாதனை: ஆப்கானிஸ்தான் அணி ஓபனர் ரஹ்மனுல்லா குல்பாஸ், இப்போட்டியில் 51 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 102 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம், வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.என்ன சாதனை? ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், அரை சதத்தை, அதிகமுறை வெற்றிகரமாக சதமாக மாற்றி வீரர்கள் பட்டியலில் குர்பாஸ் முதல் இடத்தில் இருக்கிறார். அதாவது, குர்பாஸ், அரை சதத்தில், 56.25 சதவீத அரை சதங்களை சதமாக மாற்றிவிடுகிறார். அதாவது, இரண்டு அரை சதங்களில், ஒன்றை சதமாக மாற்றிவிடுகிறார். விராட் கோலி, 41.22 சதவீத அரை சதங்களைதான், சதமாக மாற்றுவதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.இருப்பினும் கோலி, 54 சதங்களை எடுத்துள்ளார். குர்பாஸ், தற்போதுதான் 9 சதங்களை அடித்துள்ளார்.அடுத்தடுத்து விக்கெட்: முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. மழை காரணமாக, பிட்ச் துவக்கத்தில் வேகத்திற்கு சாதகமாக இருந்தது. இதனால், இதனை சமாளிக்க முடியாமல் இப்ராஹிம் ஜோர்டன் 1 (4), செதிகுல்லா அடல் 0 (2), ரஹ்மத் ஷா 3 (8) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், மறுமுனையில், குர்பாஸ் அபாரமாக செயல்பட்டு ரன்களை குவித்தார்.பிறகு, ஹஸ்மதுல்லா 27 (30) ரன்களையும், அஜ்மதுல்லா ஓமர்சாய் 16 பந்தில் 26 ரன்களையும் எடுத்து அசத்தினார்கள். இவர்களை தவிர மற்ற எந்த பேட்டரும் இரட்டை இலக்க ரன்களை அடிக்கவில்லை. இப்படி, 11 பேட்டர்களில் 3 பேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடித்தார்கள். மற்றவர்கள் சொதப்பியதால், ஆப்கானிஸ்தான் அணியால் 24.5 பந்துகளில் 194/10 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.இந்திய அணி, அறிமுக வேகப்பந்து வீச்சாளர் குர்நூர் பிரார் 4.5 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், 5 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். மற்றொரு அறிமுக பௌலர், ஹர்ஷ் துபே 5 ஓவர்களில் 47 ரன்களை கசியவிட்டாலும், 3 விக்கெட்களை எடுத்து அசத்தினார். நிதிஷ் ரெட்டியும் சிறப்பாக பந்துவீசி, 4 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு ஓவர் வழங்கப்பட்டது. அதில், 19 ரன்களை வாரி வழங்கினார்.வெற்றி வாய்ப்பு எப்படி? இந்திய அணியால், 195 ரன்களை விரைந்து துரத்தி வெற்றியைப் பெற முடியும் எனக் கருதப்படுகிறது. கடந்த ஐபிஎல் 2026 சீசனில் கூட, தர்மசாலாவில் சராசரியாக 200 ரன்களை சுலபமாக அடிக்க முடிந்தது. இதனால், இந்திய அணியால் விரைந்து வெற்றியைப் பெற முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *