
சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை தவறவிட்ட நிலையில், அதுக்குறித்தான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின். இதனிடையில் இன்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகை தந்த திரும்பி சென்று விட்டார். இது பல விதமான சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளது.திமுகவில் மிகவும் மூத்த நிர்வாகியாக திகழும் துரைமுருகன் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இதனிடையில் இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றி கழகம் அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சு தற்போது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.இதனிடையில் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் உடனடியாக காரில் ஏறி அங்கிருந்து கிளம்பி விட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதோடு மூத்த நிர்வாகிகள் யாரும் துரைமுருகனை கண்டுகொள்ளவிலை. இதன் காரணமாகவே அவர் அங்கிருந்து அதிருப்தியில் கிளம்பி சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதே நேரம் அண்ணா அறிவாலயத்தில் இருந்து காரில் கிளம்பவிருந்த துரைமுருகனிடம், ஒருவர் வந்து துணை பொதுச்செயலாளர் கனிமொழி உங்களை கேட்டதாக கூறினார். அதற்கு அவர் கூட்டமாக உள்ளது. ஏதாவது இன்பெக்சன் (நோய் தொற்று) ஏற்பட்டு விடும். மருத்துவர் கூட்டமான இடத்துக்கு போக வேண்டாம் என அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். இது சம்பந்தமான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலானது.இந்நிலையில் திமுக ஐடி விங் மூத்த நிர்வாகிகள் கண்டுகொள்ளாத காரணத்தால் துரைமுருகன் மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்காமல் கிளம்பி சென்றதாக பரவிய செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளது. இது சம்பந்தமாக பகிரப்பட்டுள்ள பதிவில், திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் குறித்து சில செய்தி ஊடகங்களில் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதோடு இந்த அவதூறு செய்திகளுக்கு கடும் கண்டனத்தையும் திமுக பதிவு செய்துள்ளது. மேலும், மருத்துவர்களுடைய தீவிர அறிவுறுத்தலின் பேரில் தொற்று ஏற்படுவதை தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தற்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே தலைமை கழகத்திற்கு வருகை தந்த அவர் அலுவலகப் பணிகள் மற்றும் எவ்வாறு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றனர் என்பதை மட்டும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். காணொளிகளை வெட்டி ஒட்டி தாமாகவே ஒரு பொய்க் கதையை உருவாக்கி செய்தி வெளியிடுவது என்பது மிகவும் கீழ்த்தரமான செயலாகும் என விமர்சித்துள்ளது திமுக ஐடி விங். அதோடு நடைபெறாத ஒரு விசயத்தை திணித்து இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை இட்டுக்கட்டி வெளியிடுவதை உடனடியாக ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஊடக தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் திமுக ஐடி விங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
