52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
தீவிரவாதம் தொடர்ந்தால் சிந்து நதி நீர் நிறுத்தப்படும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற மகாராணா பிரதாப் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதை விஷயங்களில் எந்தவித சமரசத்தையும் செய்யாது என்று தெரிவித்தார். பாஜக அரசு மனிதநேயம் மற்றும் நீதியின் அடிப்படையில் செயல்படுகிறது என்றும், மதம் அல்லது ஜாதி அரசியலை முன்னிறுத்துவதில்லை என்றும் கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் உறவு

மேலும், 2014-க்கு முன்பு நாட்டில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடந்தபோதும், அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றுஅரசுகளை விமர்சித்தார். சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், மூன்று படைகளின் தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினேன். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாரா என்று கேட்டபோது, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகள் அனைவரும் முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்தனர் என்றார். தேவைப்பட்டால் தீவிரவாதத்தை ஒழிக்க எல்லை தாண்டியும் இந்திய ராணுவம் நடவடிக்கை எடுக்க தயங்காது என்றும் கூறினார்.

ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் எச்சரிக்கை

சிந்து நீர் ஒப்பந்தம் குறித்தும் அவர் முக்கிய கருத்து தெரிவித்தார். பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்தை ஆதரித்தால், இந்தியா இனி அமைதியாக இருக்காது என்றும்ஒப்பந்தத்தை ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளதாகவும் கூறினார். இந்தியாவின் நீர் வளங்கள் இனி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், அந்த நாடு தண்ணீருக்கும் உணவுக்கும் திணறும் நிலை உருவாகும் என்றும் எச்சரித்தார்.

ஆக்ரா நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேச்சு

ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்து, தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா இனி அரசியல், ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியாக கடுமையான அணுகுமுறையை பின்பற்றத் தயாராக இருப்பதை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1960 ஆம் ஆண்டு உலக வங்கியின் நடுவரத்துடன் கையெழுத்தான ஒப்பந்தமே சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty) ஆகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிந்து நதி அமைப்பில் உள்ள ஆறு நதிகளின் நீர் பயன்பாடு இரு நாடுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய கிழக்கு நதிகளின் நீரை இந்தியா பயன்படுத்தும் உரிமை பெற்றது.

எல்லை தாண்டிய பயங்கரவாத எச்சரிக்கை

சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகளின் நீர் பயன்பாட்டில் பாகிஸ்தானுக்கு முக்கிய உரிமை வழங்கப்பட்டது. சமீபத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் அரசியல் மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் இரு நாடுகளும் பதற்றம் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *