நேற்றைய தினம் போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடந்த மாரத்தான் போட்டியில் முதல்வர் பங்கேற்றார். இது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், தவெக அமைச்சர் பொது வெளியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சைகளை எழுந்தது. இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் இது சம்பந்தமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.அதாவது அமைச்சராக தவெகவை சரத்குமார் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் ஐபிஎல் போட்டியின் போது பொது வெளியில் வெள்ளை நிற மாத்திரை ஒன்றை போனில் வைத்து ஏடிஎம் கார்டு வைத்து நுணுக்குவதை போன்று வீடியோ வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இதனிடையில் அமைச்சர் சரத்குமார், எனது குழந்தைக்கு உடம்பு சரியில்லை. அதற்காக அவருக்கு கொடுக்க மாத்திரையை நுணுக்கினேன். இதனை திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என விளக்கம் அளித்துள்ளார். அவருடைய இந்த விளக்கம் தொடர்பாகவும் பல கேள்விகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த சர்ச்சை தொடர்பாக பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.அதில் கூறப்பட்டு இருப்பதாவது, சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - இதற்கேனும் போதைப்பொருள் ஒழிப்புக்காக தன்னுடைய முதல் கையெழுத்திட்ட முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும், இரண்டு வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, அதனை தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்குமாறு அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.நேற்றைய தினம் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தன்று அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோ வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு ஐபில் போட்டியில் பங்கேற்றேன். அப்போது குழந்தைக்காக தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ஏடிஎம் கார்டு மூலமாக crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் அமைச்சர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு பதிலாக ஐபிஎல் போட்டிக்கு அழைத்து சென்றதுடன், அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதை Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கிறார் அமைச்சர். அவருடைய அந்த வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளது எளிதாக புறந்தள்ள முடியாது.அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு இதை பற்றி விசாரிக்காமல் கடந்து செல்வாரா தமிழக முதல்வர் ஜோசப் விஜய் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது என தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தன்னுடைய சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றி புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைப்பதற்கு குழந்தைகளை வைத்து இன்ஸ்டா ரீல்ஸ்களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது என கடும் விம்ர்சனங்களை முன்வைத்துள்ளார் டிடிவி தினகரன்.தொடர்ந்து அவருடைய பதிவில், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டை நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அதோடு அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் எனவும் டிடிவி தினகரன் தன்னுடைய பதவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

