52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
Women T20 World Cup 2026 – அரையிறுதி இடங்கள் உறுதி: அட்டவணை இதோ – இந்தியா நிலைமை என்ன?

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் நிறைவு பெற்றுவிட்டன. இதில், கடைசி லீக் போட்டியில் இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலிய மகளிர் அணியும் மோதின.இப்போட்டியில், இந்திய மகளிர் அணி வென்றால், அரையிறுதிக்கு முனேன்றிவிடுவார்கள். தோல்வியை சந்தித்தால், தென்னாப்பிரிக்க மகளிர் அணி, அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்ற நிலைமை இருந்தது. இதனால், இப்போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.: இந்நிலையில், இந்த கடைசி லீக் போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 170 ரன்களை அடித்து அசத்தியது. மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், அதிகபட்சமாக 164 ரன்கள் மட்டுமே இதுவரை சேஸ் செய்யபட்டுள்ளதால், இப்போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில், ஆஸ்திரேலிய மகளிர் அணியில் எலிஸ் பெர்ரி 56 (38), ஆஷ்லே கார்ட்னர் 53 (29) ஆகியோர் அபாரமாக செயல்பட்டு அசத்தியதால், ஆஸ்திரேலிய மகளிர் அணி, 19 ஓவர்களில் 172/4 ரன்களை எடுத்து அபார வெற்றியைப் பெற்று, இந்திய மகளிர் அணியை வெளியேற்றியது.இதனைத் தொடர்ந்து, தற்போது அரையிறுதிக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.அரையிறுதிக்கு, குரூப் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலிய மகளிர் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் முன்னேறியுள்ளன. இதில், ஆஸ்திரேலிய மகளிர் அணி 10 புள்ளிகளையும், தென்னாப்பிரிக்க மகளிர் அணி, 8 புள்ளிகளையும் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.இந்திய மகளிர் அணி 6 புள்ளிகளுடனும், வங்கதேச மகளிர் அணி 4 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் மகளிர் அணி 2 புள்ளிகளுடன், 3, 4, 5 ஆகிய இடங்களை பிடித்து, அரையிறுதி வாய்ப்பை இழந்தன. நெதர்லாந்து மகளிர் அணி ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.குரூப் பி பிரிவில், இங்கிலாந்து மகளிர் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி, 6 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இலங்கை மகளிர் அணியும் 6 புள்ளிகளைதான் பெற்றுள்ளது. இருப்பினும், 0.6 நெட் ரன்ரேட் வித்தியாசத்தில், அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.நியூசிலாந்து மகளிர் அணி, 4 புள்ளிகளையும், ஸ்காட்லாந்து மகளிர் அணி 2 புள்ளிகளையும், அயர்லாந்து மகளிர் அணி 2 புள்ளிகளையும் பெற்று, அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.அரையிறுதி அட்டவணை: முதல் அரையிறுதிப் போட்டி, ஜூன் 30ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி, ஜூலை 2ஆம் தேதியும் நடைபெறும்.இதில், முதல் அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா மகளிர், மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகள் மோதும். இதனைத் தொடர்ந்து, 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதும்.முதல் அரையிறுதிப் போட்டி, இந்திய நேரப்படி, இரவு 7 மணிக்கு துவங்கும். இரண்டாவது அரையிறுதிப் போட்டி, இந்திய நேரப்படி, இரவு 11 மணிக்கு துவங்கும். இதனைத் தொடர்ந்து, இறுதிப் போட்டி நடைபெறும். இப்போட்டி, ஜூலை 5ஆம் தேதி, இந்திய நேரப்படி, இரவு 7 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *